கண்ணோடு தேங்கிப் போன கனவுகள்.. மீண்டும் பிறந்து வா பாபு!

Sep 19, 2023,03:00 PM IST

சென்னை: ஒவ்வொரு கனவின் வலியும் கண்ணில் தெரியும் என்பார்கள்.. பாபுவும் அப்படித்தான்... பரிதாபமாக மரணித்துப் போயிருக்கிறார் என் உயிர்த் தோழன் பாபு.


இயக்குநர் பாரதிராஜாவின் என் உயிர் தோழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக  அறிமுகமானவர் நடிகர் பாபு. கடந்த 30 வருடமாக படுத்த படுக்கையாக இருந்து வந்த பாபு தற்போது மரணத்தைத் தழுவியுள்ளார்.




மிகப் பெரும் சினிமாக் கனவுடன் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாபு. என் உயிர்த் தோழன் படத்தில் அவர் மெட்ராஸ் பாஷை பேசி படு இயல்பான நடிப்பை அளித்து அசத்தியிருந்தார். அந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. அடுத்தடுத்து அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு என அவர் நடித்த படங்களில் அவர் பேசப்பட்டார்.


அடுத்து அவர் நடித்த மனசார வாழ்த்துங்களேன் படம் அவரது வாழ்க்கையை முடக்கிப் போட்டு விட்டது. இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. நடமாட முடியாத நிலைக்குப் போய் விட்டார் பாபு. அன்று முதல் அவர் கடந்த 30 வருடமாக படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார்.


படுக்கையில் கிடந்தபடி தனது கனவுகள் எல்லாம் நொறுங்கிப் போனதை எண்ணி எண்ணி வேதனைப்பட்டு வந்த அவருக்கு, தான் மறுபடியும் நடமாடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அது கடைசி வரை பலிக்காமலேயே போய் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டுப் போய் விட்டார் பாபு.


பாபுவின் கண்கள் மிகவும் பவர்புல்லாக இருக்கும். அத்தனை உணர்வுகளையும் அதில் அழகாக காட்டுவார் பாபு. அந்தக் கண்களை இப்போது பார்த்தாலும் கூட அவரது தேங்கிப் போன கனவுகளை பார்க்க முடியும்.. மீண்டும் பிறந்து வாங்க பாபு.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்