MRTS.. சென்னை வேளச்சேரி டூ பீச் ரயில்கள்.. நாளை முதல் மீண்டும் இயக்கம்.. என்ஜாய் மக்களே!

Oct 28, 2024,08:52 PM IST

சென்னை: சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரையிலான எம்ஆர்டிஎஸ் ரயில் சேவை (மாடி ரயில்) நாளை முதல் மீண்டும் வழக்கம் போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரை இந்த மாடி ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சென்னை கடற்கரை முதல் எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் மாடி ரயில் சேவை வேளச்சேரி முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது நான்காவது வழித்தடப் பணிகள் முடிவுற்றிருப்பதால் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான மாடி ரயில் சேவைகள் வழக்கம் போல இயக்கப்படவுள்ளன.




நாளை முதல் இந்த ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் மாடி ரயில் சேவையால் பலனடைந்து வரும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறு மார்க்கத்தில் அதேபோல 45 ரயில்களும் என மொத்தம் 90 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கடற்கரையிலிருந்து முதல் ரயில் காலை 4.53 மணிக்கும், வேளச்சேரியிலிருந்து முதல் ரயில் காலை 4 மணிக்கும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மாடி ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு பெரும் அசவுகரியமாக இருந்து வந்தது. அதைத் தாண்டி போக வேண்டியவர்கள் சிரமப்பட்டு வந்தனர். தற்போது மாடி ரயில் மீண்டும் ஓடப் போவதால் மக்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் முடிவுக்கு வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்