சென்னை: தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிப்பு செய்த ஆளுநர் ரவியை கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று காலை 9:30 மணி அளவில் தொடங்கியது. சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு காவல்துறையினர் சார்பில் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன் பிறகு பொன்னாடை அளித்து வரவேற்று சபாநாயகர் அப்பாவு ஆளுநரை சட்டமன்ற வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார். பின்னர் கூட்டத்தொடர் தொடங்கியது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனை அடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி, உரையை வாசிக்காமலேயே உள்ளே வந்த மூன்று நிமிடத்திலேயே வெளியேறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்,பாரதி அறிக்கை வெளியிட்டார்.
இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. அதில், சட்டசபையில் தமிழ்த்தாய் மட்டுமே இசைக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்படுகிறது. அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது.
இந்த நிலையில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தாமல் சென்ற ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து திமுக சார்பில் புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, உட்பட தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் தலைமையில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுக தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசு ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர். அதேபோல் பாஜகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு ஆளுநருக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் என தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி நடைபெறுகிறது.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
பொய்யைப் படிக்க வேண்டாம் என்பதால் வெளியேறிப் போயிருக்கலாம்.. ஆளுநருக்கு சீமான் ஆதரவு
ஈரோடு கிழக்கு தொகுதி.. திமுகவுக்கா அல்லது காங்கிரசுக்கா? .. காத்திருக்கும் வி.சி. சந்திரகுமார்
ஆளும் கட்சிக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? .. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அதிமுகவைப் பார்த்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
தண்டனை (சிறுகதை)
Gold rate.. கடந்த 3 நாட்களாக அமைதிகாத்த தங்கம் விலை... இன்று திடீர் உயர்வு...!
திமுக போராடினால் வழக்கு.. பாமக போராடினால் கைதா? .. ஆஹா.. நல்லா இருக்கே .. டாக்டர் அன்புமணி
ISRO.. கன்னியாகுமரியிலிருந்து.. இன்னொரு இஸ்ரோ தலைவர்.. யார் இந்த வி. நாராயணன்?
{{comments.comment}}