பாலஸ்தீன இந்தியர்களுக்கு அவசர ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு

Oct 11, 2023,06:13 PM IST

டெல்லி: பாலஸ்தீனத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.


ஹமாஸ் அமைப்பின் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து காஸாமுனைப் பகுதியை குணடு வீச்சாலும் அதிரடித் தாக்குதலாலும் சூறையாடி வருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல், அப்பாவி பாலஸ்தீனியர்களும் உயிரிழந்து வருகின்றனர்.




ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் வசித்து வரும் இந்தியர்களுக்கு உதவ களம் இறங்கியுள்ளது மத்திய அரசு. அவசர கால ஹெல்ப்லைன் எண்களை மத்திய அரசு அறிவித்துளளது.


அதன்படி பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள், தங்களுக்கு உதவி தேவைப்பட்டால், இந்தியப் பிரதிநிதி அலுவலகத்தை நேரடியாக அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்குக் கரையின் ரமல்லா நகரில் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதிநிதி அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஜவ்வால் - 0592-916418 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 970-592916418 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்