டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களால் பெரும் ஆபத்து உள்ளது. அதில் முறைகேடு செய்ய முடியும். அதை ஒழிக்க வேண்டும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்தியாவில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் ப்யூர்டோரிகா நாட்டில் நடந்த தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நல்ல வேளையாக அங்கு வாக்குச் சீட்டுக்களும் பயன்படுத்தப்பட்டதால் சரியான எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. வெறும் இயந்திரங்களில் மட்டும் வாக்குப் பதிவு நடந்திருந்தால் முறைகேடுகள் தெரியாமல் போயிருக்கும். இப்படி வாக்குச் சீட்டுகள் இல்லாமல் நடக்கும் வாக்குப் பதிவுகளின் கதி கவலையைத் தருகிறது.
எலான் மஸ்க்கின் கவலை
அமெரிக்க மக்களுக்கு தாங்கள் அளிக்கும் வாக்குகள் சரியான நபருக்கே போய்ச் சேர்ந்ததா என்பதை அறிவதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். தேர்தல்களில் முறைகேடுகள் ஏற்றுக் கொள்ள முடியாது. மீண்டும் நாம் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டியது அவசியம் என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். மனிதர்களாலோ அல்லது செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்பம் மூலமாகவோ இவற்றை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. சிறிய அளவில் இருந்தாலும் கூட அது மிகப் பெரிய ஆபத்துதான் என்று கூறியுள்ளார் மஸ்க்.
ராகுல் காந்தியின் பதில்
இந்த கருத்து சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில். காரணம், இங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிராக நீண்ட காலமாக கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக இதை எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் மஸ்க்கின் கருத்து இந்தியாவில் அதிக அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தியும் இதில் இணைந்துள்ளார். அவர் மகாராஷ்டிராவில் நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டி மஸ்க்குக்கு பதிலளித்துள்ளார். அதில், இந்தியாவைப் பொறுத்தவரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கருப்பு பெட்டி போல. யாரும் அதை பரிசோதிக்க அனுமதியே கிடையாது. நமது தேர்தல் முறைகளின் வெளிப்படைத் தன்மை குறித்து மிகத் தீவிரமான கவலைகள் எழுந்து வருகின்றன. தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மை குலையும்போது ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
ராஜீவ் சந்திரசேகரின் விளக்கம்
ஆனால் எலான் மஸ்க்கின் கருத்துக்கு பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சரும், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவருமான ராஜீவ் சந்திரசேகர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜீவ் சந்திரசேகர் போட்டுள்ள டிவீட்டில், உங்களுடையது பொதுப்படையான குற்றச்சாட்டு. இது தவறானது. எலான் மஸ்க்கின் கருத்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்குத்தான் பொருந்தும். காரணம் அங்கு எல்லா கம்ப்யூட்டர் தொடர்பான கட்டமைப்புகளும் இன்டர்நெட்டுடன் இணைந்துள்ளன. குறிப்பாக வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்தவகையான கட்டமைப்புடனும் இணைக்கப்படுவதில்லை - அதாவது இன்டர்நெட், ப்ளூடூத், வைபை என எந்த தகவல் தொடர்புடனும் இணைக்கப்படுவதில்லை. எந்த கன்ட்ரோலிங் முறையாலும் இவற்றின் புரோகிராமையும் மாற்ற முடியாது. இந்தியாவில் இவை மிகச் சரியாகவே உள்ளன. எலான் மஸ்க்குக்கு இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நாங்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் ராஜீவ் சந்திரசேகர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}