டிவிட்டரை என்ன செய்யப் போகிறார் எலான் மஸ்க்.. குண்டைப் போட்ட டிவீட்!

Jul 23, 2023,11:04 AM IST
சென்னை: விரைவில் எல்லாம் போகப் போகிறது என்று டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் போட்ட டிவீட்டால் பரபரப்பாகியுள்ளது. டிவிட்டரின் பெயர், லோகோ உள்ளிட்ட எல்லாவற்றையும் மாற்றப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

விடிஞ்சு எழுந்து வந்தா இந்தாளு என்ன பண்ண வச்சிருக்கிறோரோன்னுதான் ஒரே அக்கப்போரா இருக்கு என்று டிவிட்டரைப் பயன்படுத்துபவர்களை தொடர்ந்து புலம்ப வைத்து வருகிறார் எலான் மஸ்க். டிவிட்டரை வாங்கியது முதலே குழப்பியடித்தபடி இருக்கிறார் மஸ்க்.


ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு தூக்கினார். சிஇஓவை தூக்கி அடித்தார். ப்ளூ டிக்குக்கு இனிமேல் காசு கட்டணும் என்றார்.. இடையில் டிவிட்டரின் லோகோவை நாய்க்குட்டியாக மாற்றினார்.. பிறகு மீண்டும் பறவை லோகோவை கொண்டு வந்தார்..  டிவீட்டுகளைப் பார்க்கவும்  கட்டுப்பாடு கொண்டு வந்தார். தொடர்ந்து ஏதாவது செய்தபடியே இருக்கிறார்.

இவர் இப்படிச் சொதப்பிக் கொண்டே இருப்பதால் டிவிட்டரின் வருமானம் பெரும் அடி வாங்கியுள்ளது. விளம்பர வருவாய் பாதியாக குறைந்து போய் விட்டதாகவும், டிவிட்டர் நஷ்டத்தில் இருப்பதாகவும் அவரே புலம்பும் நிலைக்குப் போய் விட்டது.




இந்த நிலையில் இப்போது அவர் போட்டுள்ள டிவீட் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "விரைவில் டிவிட்டர் பிராண்ட்டுக்கு குட்பை சொல்வோம்.. படிப்படியாக எல்லாப் பறவைகளும் போய் விடும்" என்று அவர் போட்டுள்ள டிவீட் பரபரப்பைக் கூட்டியுள்ளது. அதேபோல இன்னொரு டிவீட்டில், எக்ஸ் லோகோ நன்றாக இருந்தால்,  அது நாளை உலகம் முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.

ஸோ, எலான் மஸ்க் டிவிட்டரை காலி செய்து விட்டு தனது நீண்ட நாள் கனவான எக்ஸை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது. எக்ஸ் என்பது அவர் நீண்டநாளாக சொல்லிக் கொண்டுள்ள ஆப்தான். புதிய டிவிட்டர் சிஇஓவாக லின்டா யாக்கரினோவை அவர் அறிமுகம் செய்தபோது கூட, டிவிட்டரை எக்ஸ் ஆக மாற்றும் மிகப் பெரிய பணியை லின்டா சிறப்பாக செய்வார் என்று நம்புகிறேன் என்றுதான் கூறியிருந்தார் மஸ்க் என்பது நினைவிருக்கலாம்.

இவர் டிவிட்டரை வாங்கியதே கூட எக்ஸ் ஆப்பை உருவாக்கி அமலுக்குக் கொண்டு வரத்தான் என்றும் கூறப்படுகிறது.  தற்போது போட்டுள்ள டிவீட்டுகளைப் பார்க்கும்போது டிவிட்டருக்கு மூடு விழா காண மஸ்க் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. அதை மூடி விட்டு அல்லது அதை மாற்றி விட்டு எக்ஸ் செயலியை அவர் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்