F... you, Elon Musk.. அதிர வைத்த பிரேசில் அதிபரின் மனைவி.. அதுக்கு மஸ்க் சொன்ன பதிலைப் பாருங்க!

Nov 17, 2024,05:18 PM IST

ரியோ டி ஜெனிரோ: எக்ஸ் தள உரிமையாளரும், அடுத்த அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய நண்பருமான எலான் மஸ்க் குறித்து பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் மனைவி ஜஞ்சா லூலா டா சில்வா கூறிய வார்த்தையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பான எக்ஸ் தளப் பதிவுக்கு சிரிப்பு எமோஜி போட்டுள்ளார் எலான் மஸ்க். 


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக சோசில் மிடியாக்கள் குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு ஜஞ்சா பேசினார். அப்போது சோசியல் மீடியாக்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டியது குறித்து அவர் விளக்கினார். பெரும்பாலான தவறான தகவல்கள், பொய்ச் செய்திகள் சோசியல் மீடியா மூலம்தான் பரவுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


அப்போது அந்த கடல் பகுதி வழியாக சென்ற கப்பலின் ஹார்ன் சத்தம் கேட்டது. இதைக் கேட்ட ஜஞ்சா, அனேகமாக இது எலான் மஸ்க்காகத்தான் இருக்க வேண்டும் என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் உங்களைப் பார்த்து பயம் இல்லை மஸ்க்.. f.. you, Elon Musk என்று கூறினார். இதைக் கேட்டு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. ரியோ டி ஜெனிரோ நகரில் நாளையும், நாளை மறு நாளும் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.




எக்ஸ் தளத்துக்கும், பிரேசில் அதிபருக்கும் இடையே ஏற்கனவே ஒரு சண்டை உள்ளது. எக்ஸ் தளம் மூலம் பொய் செய்தி பரப்புவோர் மீதும், அரசின் உத்தரவுகளை மீறுவோர் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களது கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் தளத்துக்கு பிரேசில் அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எக்ஸ் தளம் கண்டு கொள்ளவில்லை. இதனால் எக்ஸ் தளத்தை  1 மாத காலத்திற்கு பிரேசில் நாட்டில் அந்த நாட்டு அரசு தடை செய்திருந்தது நினைவிருக்கலாம்.


அப்போது முதலே இரு தரப்புக்கும் இடைய உரசல் உள்ளது. இன்னொரு முறை, எலான் மஸ்க் போட்ட எக்ஸ் பதிவில், பிரேசில் அதிபர் தேர்தலில் அதிபர் லூயிஸ் தோற்பார் என்று கூறியிருந்தார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அதிபரின் மனைவி கூறிய வார்த்தை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த பேச்சுக்கு சிரிப்பு எமோஜி போட்டு விட்டு கடந்து சென்றுள்ளார் எலான் மஸ்க்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்