கலிபோர்னியா: டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்குக்கு 3 குழந்தைகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எலான் மஸ்க் மற்றும் அவரது முன்னாள் காதலியான கிரிம்ஸ் ஆகியோருக்கு 2 குழந்தைகள் இருப்பதாகத்தான் இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் அந்த ஜோடிக்கு 3 குழந்தைகள் இருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த தகவலை The New York Times நாளிதழ் வெளியிட்டுள்ளது.
The New York Times.. எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு ஆய்வு நூலை எழுதியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள அந்த நூலில்தான் இந்த விவரம் இடம் பெற்றுள்ளதாம். செப்டம்பர் 12ம் தேதி இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.
எலான் மஸ்க் மற்றும் கிரிம்ஸ் ஆகியோரின் 3வது குழந்தையின் பெயர் டெக்னோ மெக்கானிக்கஸ் என்பதாகும். இது ஆண் குழந்தை. இந்தக் குழந்தை எப்போது பிறந்தது என்பது உள்ளிட்ட பிற தகவல்கள் இதுவரை தெரியவில்லையாம். இந்தக் குழந்தையையும், அதுகுறித்த பிற தகவல்களையும் எலான் மஸ்க், கிரிம்ஸ் ஆகியோர் ரகசியமாக வைத்துள்ளனராம்.
எலான் மஸ்க்குக்கு 3 பெண்கள் மூலம் மொத்தம் 10 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிரிம்ஸின் உண்மையான பெயர் கிளேர் பெளச்சர் என்பதாகும். இவர் கனடாவைச் சேர்ந்தவர். 35 வயதான இவருடன் 2018ம் ஆண்டு முதல் 2022 வரை காதல் கொண்டிருந்தார் எலான் மஸ்க். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் இந்த 3 குழந்தைகளை மஸ்க் பெற்றுள்ளார்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}