சான்பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் தளத்தை, தன்னுடைய எக்ஸ்ஏஐ நிறுவனத்திற்கு விற்று விட்டார். 33 பில்லியன் டாலர் மதிப்புக்கு இந்த பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். மேலும் இரு நிறுவனங்களும் இனி இணைந்து செயல்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளம் இனி செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்பத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக மாறும். மிகப் பெரிய வளர்ச்சியையும் அது காணும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளம் முன்பி டிவிட்டர் என்று அழைக்கப்பட்டது. அதை எலான் மஸ்க் வாங்கி எக்ஸ் என்று பெயர் மாற்றினார். எக்ஸ் தளத்தில் தற்போது 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். உலகின் முன்னணி சமூக வலைதளமாக இது திகழ்கிறது. இந்த நிலையில்தான் இதை வேறு லெவலில் வளர்க்க வேண்டும் என்பதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எக்ஸ் ஏஐ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார் எலான் மஸ்க்.
எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ ஆகியவை இணைந்து புதிய பாதையில் நடை போடும். இனி இது வெறும் சமூக வலைதளமாக மட்டும் இல்லாமல், மனித குல முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.
மேலும் இந்த விற்பனையின் மூலமாக இரு நிறுவனங்களையும் இணைத்துள்ளார் எலான் மஸ்க். இதில் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலராகவும், எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 33 பில்லியன் டாலராகவும் இருக்கும்.
கடந்த 2022ம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் எலான் மஸ்க் என்பது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்துதான் அவர் எக்ஸ்ஏஐ நிறுவனத்தை அடுத்த ஆண்டு தொடங்கினார். அடுத்தடுத்து பல மாற்றங்களையும் அவர் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் எக்ஸ் தளத்தில் அவர் அறிமுகப்படுத்திய க்ரோக் பெரிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. சாட் ஜிபிடி, டீப்சீக் ஆகியவற்றுக்கு போட்டியாக இது மாறி வருகிறது. எக்ஸ் தளத்தில் க்ரோக் படும் பாட்டைப் பார்த்தாலே இது தெரியும்.
இதில் என்ன வேடிக்கை என்றால் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுதான் கடந்த 2015ம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தை உருவாக்கினர். இதுதான் சாட் ஜிபிடியை உருவாக்கியது. இப்போது தான் உருவாக்கிய சாட் ஜிபிடிக்குப் போட்டியாக க்ரோக்கை களம் இறக்கி விட்டுள்ளார் எலான் மஸ்க்.
கொடைக்கானலுக்கு செல்லும்.. வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்.. இன்று நள்ளிரவு முதல் அமல்..!
மராத்தி பேசாவிட்டால் பளார்னு அறையுங்கள்.. தமிழ்நாட்டின் தைரியம் நமக்கு வேண்டும்.. ராஜ் தாக்கரே
ஏப்,6ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம்: தமிழக காங், தலைவர் செல்வபெருந்தகை
தோனி கடைசி ஓவர்களில் களம் இறங்குவது ஏன் தெரியுமா?.. பிளமிங் சொல்லும் காரணம் இதுதான்!
கிப்லி டிரெண்டில் கை கோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.. அசத்தல் புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சி!
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? : டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
விஜய் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து நானும் நிற்க தயார்: பவர் ஸ்டார் சீனீவாசன்!
Attn passengers: ஏப்ரல் 1 முதல் 30 வரை.. தென்காசி டூ செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து..!
நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே சூர்யா காம்போவில்.. சர்தார் 2 டீசர் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு!
{{comments.comment}}