புதுசா எக்ஸ் பக்கத்துக்கு வர்றீங்களா.. டிவீட் பண்ண காசு கொடுக்கணும்.. எலான் மஸ்க் போட்ட புது ரூல்!

Apr 16, 2024,11:40 AM IST
டெல்லி: எக்ஸ்  தளத்தில் புதிய கணக்கு தொடங்குவோர் இனி பதிவுகளைப் போட சிறிய அளவிலான கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்று புதிய ரூல் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் எக்ஸ் தளத்தில் கணக்கு தொடங்க விரும்புவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் மிகப் பிரபலமானது டிவிட்டர் என்று முன்பு அழைக்கப்பட்ட எக்ஸ் தளம். எலான் மஸ்க்கின் நிறுவனமான எக்ஸ் தளத்தில்தான் பலரும் இன்று லிவிங்ஸ்டன் என்று கூறும் அளவுக்கு மிகப் பிரபலமானது, அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு சமூக வலைதளமாகவும் அது திகழ்கிறது.

விஜய் - அஜீத் ரசிகர்கள் சண்டைக்கு  மட்டுமல்ல, பல நல்ல தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், நாட்டு நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், டிரெண்டிங் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் எக்ஸ் தளம்தான் கை கொடுக்கிறது. எலான் மஸ்க் வசம் எக்ஸ் தளம் வந்தது முதல் ஏகப்பட்ட மாற்றங்கள். லோகோவை மாற்றினார்கள், நிறுவனத்தின் பெயரை மாற்றினார்கள், ப்ளூ டிக் விற்பனை என ஏகப்பட்ட மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது எக்ஸ் தளம்.



இந்த நிலையில் புதிய மாற்றம் ஒன்றை எக்ஸ் தளம் கொண்டு வரவுள்ளது. அது என்னவென்றால் புதிதாக எக்ஸ் கணக்கை ஆரம்பிப்போர் இனிமேல் பதிவுகள் போட அதாவது டிவீட் செய்ய காசு தர வேண்டும் என்பதே அது. இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில் துரதிர்ஷ்டவசமாக பாட்களின் தொல்லை எக்ஸ் தளத்தில் அதிகரித்து விட்டது. இதை கட்டுக்குள் கொண்டு வர ஒரே வழி டிவீட் போடுவதற்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிப்பதுதான் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.

மேலும் அவர் கூறுகையில் பலர் போலி கணக்குகளை வைத்துக் கொண்டு, உண்மையானவர்களின் கணக்குகளுக்கு இடையூராக இருக்கிறார்கள். இதனால் உண்மையானவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதையும் நாம் இந்த கட்டண அறிமுகத்தால் சரி செய்ய முடியும் என்று கூறியுள்ளார் மஸ்க்.

இந்த கட்டணமானது புதியவர்களுக்குத்தான். அதுவும் கூட 3 மாதங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுமாம். அதன் பின்னர் அவர்கள் இலவசமாக பதிவிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மஸ்க் விளக்கியுள்ளார்.

இந்தத் திட்டமானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நியூசிலாந்து, பிலிப்பைன்ஸில் அமலுக்கு வந்து விட்டது. புதிய வெரிபைட் செய்யப்படாத பயன்பாட்டாளர்கள் வருடத்திற்கு 1 டாலர் கட்டணம் செலுத்தி எக்ஸ் தளத்தைப் பயன்படுத்தும் திட்டம் அங்கு அமலில் உள்ளது. தற்போது இதைத்தான் அத்தனை நாடுகளுக்கும் விஸ்தரிக்கப் போகிறது எக்ஸ் தளம்.

எக்ஸ் தளத்தில் பாட்கள், போலி கணக்குகள், ஸ்பாம் கணக்குகள் என ஏகப்பட்ட குப்பைகள் உள்ளன. இதை சரி செய்யும் பணியையும் தற்போது எக்ஸ் தளம் முடுக்கி விட்டுள்ளது. சமீபத்தில் பல பாட் கணக்குகளை எக்ஸ் தளம் நீக்கியது. இதனால் பலருக்கும் பாலோயர்கள் அதிரடியாக குறைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்