கலிபோர்னியா: அமெரிக்காவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் வாக்கு எண்ணிக்கையைப் பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவில் சமீபத்தில்தான் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கை எப்போதுமே மெதுவாகத்தான் நடைபெறும். நம்ம ஊரைப் போன்ற மின்னல் வேகம் எல்லாம் அமெரிக்காவில் கிடையாது. இதற்கு ஒரு உதாரணம்.. நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது இல்லையா.. அதில் கலிபோர்னியாவில் பதிவான வாக்குகள் இன்னும் முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை. அதாவது 20 நாட்களாகி விட்டது.. இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறார்களாம்!
இப்படித்தான் அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு அக்கப்போர் நடந்தபடி இருக்கும். இத்தனைக்கும் எல்லா வசதிகளையும் கொண்ட நாடு அமெரிக்கா. அங்கேயே இந்த கதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மறுபக்கம் இந்தியாவில் நடைபெறும் வாக்குப் பதிவாகட்டும், வாக்கு எண்ணிக்கையாகட்டும்.. உலக நாடுகள் பார்த்து அதிசயிக்கும் வகையில்தான் உள்ளன. பரிந்து விரிந்த இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது நாம் எப்படி தேர்தலை நடத்துகிறோம் என்று பார்க்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் ஆர்வமாக இந்தியாவுக்கு வருவது வழக்கம்.
64 கோடி வாக்குகள்.. ஒரே நாளில் ஓவர்
இந்த நிலையில் இந்தியாவின் வாக்கு எண்ணும் முறையை எலான் மஸ்க் பாராட்டியுள்ளார். இந்தியா எப்படி 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்தது என்று வெளியான செய்தியை மேறகோள் காட்டி தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் போட்ட பதிவில், இந்தியாவில் 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்து விட்டனர். ஆனால் கலிபோர்னியாவில் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று கடுப்பாக போட்டுள்ளார்.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின்போது மொத்தம் உள்ள 90 கோடி வாக்காளர்களில் 64 கோடி வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகளை எண்ணும் பணியானது ஒரே நாளில் முடிவடைந்தது. பெரிய அளவில் எந்தத் தாமதமும் நடைபெறவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோலத்தான் இந்தியாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இப்போதாவது நாம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறோம். முன்பு வாக்குச் சீட்டு முறைதான் இருந்தது. அப்போதும் கூட அதிகபட்சம் 2 நாட்களில் முடிவுகளை அறிவித்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
10 கோடி வாக்குகள் சில மணி நேரங்களில்!
சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் பல்வேறு மாநில இடைத் தேர்தலில் பதிவான கிட்டத்தட்ட 10 கோடி வாக்குகளையும் கூட சில மணி நேரங்களிலேயே எண்ணி முடித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மகாராஷ்டிரா மாநில வாக்காளர்களின் எண்ணிக்கையானது, கலிபோர்னியா வாக்காளர்களை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்பது சுவாரஸ்யமானது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை முடியாது. சில மாகாணங்களில் வாரக் கணக்கில் இழுத்துக் கொண்டு போவது வழக்கம். குறிப்பாக கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் இது தொடர்கதையாகவே உள்ளது. அமெரிக்காவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் கலிபோர்னியாதான். இங்கு இன்னும் 3 லட்சம் வாக்குகள் எண்ணப்படாமலேயே உள்ளனவாம். இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
கலிபோர்னியா குழப்பத்துக்கு இதுதான் காரணம்
கலிபோர்னியாவில் ஏன் இத்தனை தாமதம் என்றால் பெரும்பாலான வாக்குகள் தபால் வாக்குகளாக பதிவானதுதான். அதில் உள்ள கையெழுத்து உள்ளிட்டவற்றை சரி பார்க்கவே போதும் போதுமென்றாகி விடுகிறதாம். அதை விடக் கொடுமை இந்தியா போல ஒரே அமைப்பின் மேற்பார்வையில் அங்கு தேர்தல் நடைபெறுவது கிடையாது. இந்தியாவில் மத்திய தேர்தல் ஆணையம் மட்டுமே சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துகிறது.
இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் தேர்தல் நடைபெறும். எனவே திட்டமிடலில் எந்தக் குழப்பமும் கிடையாது. ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு தனி தேர்தல் ஆணையம் இருக்கிறது. அவர்கள்தான் நடத்துவார்கள். அந்தந்த மாகாணத்திற்கு உள்ள சட்ட திட்டங்கள் வேறுபடுமாம். இதனால்தான் தெளிவான முடிவுகளை அறிய பல வாரக் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறதாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
{{comments.comment}}