கங்கிராஜுலேஷன்ஸ் மோடி.. வாழ்த்தியது யாருன்னு பார்த்தீங்களா?.. டிரிப்பை கேன்சல் செய்தாரே.. அவரேதான்!

Jun 08, 2024,09:26 AM IST

டெல்லி: பிரதமர் மோடிக்கு, நம்ம எலான் மஸ்க் வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வருவதாக திட்டமிட்டிருந்த அவர் கடைசி நேரத்தில் அதை தள்ளி வைத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


டெஸ்லா நிறுவனம், டிவிட்டர் உள்ளிட்டவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க், இந்தியாவில் தனது டெஸ்லா தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டு வருகிறார். இதுதொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்துள்ளன. இந்த ஆலையை எங்கு அமைப்பது என்பதில்தான் குழப்பம் நிலவுகிறது. 




இந்த நிலையில்  கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் டெல்லி வருவதாக இருந்தது. அந்த சமயத்தில் டெஸ்லா ஆலையை தொடங்குவது தொடர்பான அறிவிப்பும், ஒப்பந்தமும் வெளியாகும் என்றும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. இது தேர்தலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜக தரப்பும் எதிர்பார்த்தது. ஆனால் திடீர் திருப்பமாக கடைசி நேரத்தில் தனது பயணத்தை தள்ளி வைப்பதாக அறிவித்து விட்டார் எலான் மஸ்க்.


ஆனால், இந்தியா பயணத்தை தள்ளி வைப்பதாக அறிவித்த அவர் சீனாவுக்கு வந்து சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி வெற்றி அடைய மாட்டார், எனவே புதிய ஆட்சி அமைந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று அவருக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் கூறின. இந்த நிலையில், தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. 




இதையடுத்து பிரதமர் மோடிக்கு, எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள். இந்தியாவில் எனது நிறுவனங்கள் அற்புதமான பணியாற்றும் சூழலை எதிர்நோக்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


இந்த வாழ்த்துச் செய்தியின் மூலம் இந்தியாவில் தனது ஆலையை நிர்மானிக்கும் விருப்பத்தை சுட்டிக் காட்டியுள்ளார் மஸ்க். இதனால் விரைவில் அவர் இந்தியாவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  டெஸ்லா நிறுவனம் தனது ஆலையை இந்தியாவில் அமைத்தால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஆலை எங்கு அமையப் போகிறது என்று தெரியவில்லை. குஜராத்தில் அமைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படாத தகவல். குஜராத் அல்லது உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆலை அமையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால் சந்திரபாபு நாயுடு மூலம் இந்த ஆலையை ஆந்திரா பக்கம் கொண்டு செல்லும் வாய்ப்புகளும் உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்