டெல்லி: தேர்தல் பாண்டுகள் என்ற பெயரில் இந்தியாவின் அத்தனை கட்சிகளுக்கும் கோடிக்கணக்கில் பணம் பாய்ந்துள்ள விவரம் மக்களை அதிர வைத்துள்ளது. மொத்தம் ரூ. 12769 கோடியே 08 லட்சத்து 93 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது, பெறப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோருக்காக தேர்தல் பாண்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் இந்த பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ. 1 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 1 கோடி என்ற அளவீடுகளில் (denomination) இந்த பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
பாஜக டாப் - ரூ. 6,061 கோடி
இதில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது, யாரெல்லாம் பணம் கொடுத்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக பாஜகதான் பெருமளவிலான பணத்தைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 47.46 சதவீத அளவுக்கு பாஜகவுக்குத்தான் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக அளவாக பாஜகவுக்கு 6061 கோடி ரூபாய் தேர்தல் பாண்டுகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் - ரூ. 1422 கோடி
தேர்தல் பாண்டுகள் மூலம் அதிக பணம் பெற்ற 2வது பெரிய கட்சி திரினமூல் காங்கிரஸ் கட்சி. அக்கட்சிக்கு ரூ. 1610 கோடி அளவுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி - ரூ. 1422 கோடி, பாரத் ராஷ்டிர சமிதி (தெலங்கானா ராஷ்டிர சமிதி) - ரூ. 1215 கோடி, பிஜூ ஜனதாதளம் ரூ. 776 கோடி பெற்றுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 337 கோடி, தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ. 219 கோடி, சிவசேனா கட்சிக்கு ரூ. 158 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக ரூ. 639 கோடி - அதிமுக ரூ. 6 கோடி
ஆம் ஆத்மி கட்சிக்கும் தேர்தல் பாண்டுகள் மூலம் பணம் கிடைத்துள்ளது. அதாவது 65 கோடியை அக்கட்சி பெற்றுள்ளது. இந்த லிஸ்ட்டில் அதிமுக பின்னாடிதான் உள்ளது. அக்கட்சிக்கு ரூ. 6 கோடி பணம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவுக்கு மட்டுமே தேர்தல் பாண்டுகள் மூலம் பணம் கிடைத்துள்ளதாக இந்தப் பட்டியல் கூறுகிறது. திமுகவுக்கு ரூ. 639 கோடி பணம் தேர்தல் பாண்டுகள் மூலம் கிடைத்துள்ளது.
லாட்டரி மார்ட்டின் கொடுத்தது ரூ. 1368 கோடி
பணம் கொடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸஸ் நிறுவனம்தான். அதாவது இது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ரூ. 1368 கோடியைக் கொடுத்துள்ளது. இதுதான் டாப்பில் இருக்கிறது.
அடுத்து மெகா என்ஜீனியரிங் நிறுவனம் ரூ. 821 கோடியைக் கொடுத்துள்ளது. ஹால்டியா எனர்ஜி நிறுவனம் ரூ. 377 கோடி, வேதாந்தா நிறுவனம் (ஸடெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனம்) - ரூ. 376 கோடி, குவிக்சப்ளை செயின் நிறுவனம் ரூ. 410 கோடி கொடுத்துள்ளன.
கட்சிகளுக்கு நிதியுதவி செய்தவர்களின் பட்டியலில் ஏர் டெல், டிஎல்எப், மதன்லால் லிமிட்டெட், ராம்கோ சிமென்ட்ஸ் உள்பட பல நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!