தாத்தா, பாட்டிகள்... நாயுடன் வாக்கிங் போனால்.. இவ்வளவு நல்லது நடக்கிறதாம்!

Dec 31, 2022,10:52 PM IST

சென்னை: வாக்கிங் போவது என்பது இப்போது கட்டாயத் தேவையாகி விட்டது. முன்பெல்லாம் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்போம். ஆனால் இப்போது போட்ட துணி போட்ட இடத்திலேயே இருப்பது போல நாமும் உட்கார்ந்தபடியே இருக்கிறோம். சுறுசுறுப்பாக வேலை செய்ய பலரும் முனைவதில்லை. இதனால் பல்வேறு உடல் உபாதைகளை இலவசமாக பெற்று அவஸ்தைப்பட நேரிடுகிறது.

உடல் பருமன், சர்க்கரை வியாதி என சகல வியாதிகளுக்கும் மூல காரணமே நமது உடல் உழைப்பின்மைதான்.இதனால்தான் பலரும் இப்போது வாக்கிங் போக ஆரம்பித்துள்ளனர். உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளமட்டும் இந்த வாக்கிங் எனப்படும் நடைப் பயிற்சி உதவுவதில்லை. மாறாக ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது.சர்க்கரை வியாதி உள்ளோர், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்தான் வாக்கிங் போக வேண்டும் என்று இல்லை.


 அனைவருமே வாக்கிங் போக வேண்டும். அது உங்களை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும் என்கிறார்கள் டாக்டர்கள்.இளம் வயதினரும், நடுத்தர வயதினரும் வாக்கிங் போவதில் பெரிதாக சிரமம் இல்லை. ஆனால் 60 வயதைக் கடந்தோர் அதிக தூரம் நடக்க முடிவதில்லை. நீண்ட நேரம் நடப்பதில்லை. குறிப்பிட்ட அளவு மட்டுமே நடந்து விட்டு உட்கார்ந்து விடுகிறார்கள்.  

ஒன்று அவர்களால் அதிக தூரம் நடக்க முடிவதில்லை அல்லது  போதும் நடந்தது என்ற மன திருப்தி அவர்களை நிறுத்த வைத்து விடுகிறது.இப்படிப்பட்ட வயதானவர்கள் அதிக தூரம் நடக்கவும், ஆக்டிவாக செயல்படவும் நாய்கள் உதவுவதாக உலக சுகாதார அமைப்புதெரிவித்துள்ளது. அதாவது நாயுடன் வாக்கிங் போனால், அந்த முதியவர்கள் வழக்கத்தை விட அதிக தூரம் நடக்கிறார்களாம். வழக்கத்தை விட அதிக அளவில் ஆக்டிவாக இருக்கிறார்களாம். இதை உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.

நாயுடன் வாக்கிங் போனால், தினசரி குறைந்தது 150 நிமிடங்களாவது முதியவர்கள் வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்களாம்.  எனவே வயதானவர்கள் நாயுடன் வாக்கிங் போவது போல ஏற்பாடு செய்து கொண்டால் அது அவர்களுக்கு கூடுதல் பலனைத் தருவதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வுக்குழுவைச் சேர்ந்த கிளாஸ்கோ காலதேனியன் பல்கலைக்கழக மூத்த ஆய்வாளர் பிலிப்பா டால் கூறுகையில், 65 வயதுக்கு மேற்பட்டோர் நாயுடன் வாக்கிங் போகும்போது, மற்றவர்களை விட கூடுதலாக 22 நிமிடங்கள் நடக்கிறார்கள். 

தினசரி கூடுதலாக 2760 அடிகள் நடக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கிறது என்றார்.அதேபோல நாயுடன் வாக்கிங் செல்வோருக்கு இன்னும் சில பலன்களும் கிடைக்கிறதாம். நாய் இல்லாமல்தனியாக வாக்கிங் செல்லும் முதியவர்கள் அடிக்கடி உட்கார்ந்து உட்கார்ந்து வாக்கிங் செல்கிறார்கள். ஆனால் நாயுடன் போகும்போது இப்படி அடிக்கடி உட்காருவது குறைகிறதாம்.  எனவே அதிக நேரம் இவர்கள் நின்றபடியோ, நடந்தபடியோ இருக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் இன்னொருவரான நான்சி கீ கூறுகையில், நாய்கள் மனிதர்களுக்குப் பல்வேறு வகையில் உதவுகின்றன. முதியோர்களுக்கு அவர்களை ஆக்டிவாக வைத்துக் கொள்ள இந்த நாய்கள் பேருதவி புரிகின்றன என்பதே இந்த ஆய்வின் முக்க���யக் கருத்தாகும்.  

எனவே நாய்கள் மூலம் முதியோர்களின் உடல் நலனை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக எங்களது ஆய்வை விரிவாக மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

இந்த ஆய்வு இங்கிலாந்தில் நடந்திருந்தாலும் கூட, நம்ம ஊர் தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும் கூட இது பொருந்தும்தான்.. எனவே இனிமேல் தனியாக நடப்பதை விட கூடவே ஒரு நாய்க்குட்டியையும் கூட்டிக் கொண்டு  செல்வது நமக்கு கூடுதல் லாபத்தையே கொடுக்கும். 

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்