சாலையில் வழி விடாத பெண்ணை.. தலை முடியைப் பிடித்து இழுத்து.. மூக்கில் சரமாரியாக குத்திய நபர்!

Jul 21, 2024,05:10 PM IST

புனே : சாலையில் தனக்கு வழி விடாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணுக்கு தலை முடியைப் பிடித்து இழுத்து தாக்கி, விட்டு, அவரை மூக்கை உடைத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நபரும், அவருடன் காரில் பயணித்த அவரது மனைவியும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.


புனேவில் உள்ள பஷ்கன்- பனீர் இணைப்பு சாலையில் ஜெர்லின் டி சில்வா என்ற பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகளை ஏற்றிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவருக்கு பின்னால் ஸ்வப்னில் கேக்கர் என்பவர் காரில் தனது மனைவியுடன் வந்துள்ளார். சுமார் 2 கி.மீ., தூரம் வரை ஜெர்லினின் ஸ்கூட்டருக்கு பின்னால் கார் வந்ததால் இடது பக்கமாக ஒதுங்கி உள்ளார் ஜெர்லின். ஆனால் திடீரென ஜெர்லியின் ஸ்கூட்டருக்கு முன்னால் வந்து காரை நிறுத்தியுள்ளார் ஸ்வப்னில்.




காரில் இருந்து ஆவேசமாக இறங்கி வந்த ஸ்வப்னில், ஜெர்லினின் தலைமுடியை பிடித்து இழுத்து இரண்டு முறை முகத்தில் குத்தி உள்ளார். இதனால் ஜெர்லினின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அவருடன் இருந்த இரண்டு குழந்தைகளை பற்றிக் கூட பொருட்படுத்தால் ஜெர்லினை முரட்டுத்தனமாக தாக்கி உள்ளார், ஸ்வப்னில். இதனை வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜெர்லின்.


அதில் அவர், நாடு எந்த அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது என பாருங்கள். மனிதர்கள் எந்த அளவிற்கு வெறி பிடித்தவர்களாக நடந்து கொள்கிறார்கள் என பாருங்கள். என்னுடைய இரண்டு குழந்தைகளும் என்னுடன் இருந்தனர். எனக்கு ஏதாவது நடந்திருந்தால் என்ன ஆவது அவர்களின் நிலைமை? ஒரு பெண் தான் எனக்கு உதவி செய்தார் என வீடியோவில் தெரிவித்துள்ளார். அவரது மூக்கு, வாய் பகுதிகளில் ரத்தம் வழிய இந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். 


இது குறித்து தெரிவித்த ஜெர்லினின் உறவினர், இந்த சம்பவம் நடந்த பிறகு தான் ஒரு நபர் தன்னை இப்படி காரணமே இல்லாமல் தாக்கியது பற்றி ஜெர்லின் கூறினார். இவளின் ஸ்கூட்டர் அவரது காரை தொடக் கூட இல்லை. பொது இடத்தில் இப்படி நடந்து கொண்டுள்ளார் என்றால் அவர் எவ்வளவு அதிகாரத்தில் இருக்க வேண்டும். அந்த நபருடன் அவரது மனைவியும் இருந்துள்ளார். ஆனால் அவரும் தன்னுடைய கணவர், ஒரு பெண்ணை தாக்கும் போது தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. குழந்தைகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், அவர்கள் இதை பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பயந்து போய் உள்ளனர் என்றார்.


இந்த வழக்கில் தற்போது ஸ்வப்னிலும், அவரது மனைவியும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக ஸ்வப்னில் மனைவியும் சேர்ந்து சிக்கலில் மாட்டியுள்ளார்.




சமீபத்தில் புனேயில், 17 வயது சிறுவன் குடித்து விட்டு காரை ஓட்டு சென்று 24 வயது இளைஞர்கள் இருவர் மீது மோதி கொன்ற சம்பவமும், அரசியல்வாதி ஒருவரின் 25 வயது மகன் குடித்து விட்டு வேகமாக காரை ஓட்டு கோழிகள் ஏற்றி வந்த வாகனம் மீது மோதி இருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தாக்குதல் நடத்திய ஸ்வப்னிலுக்கு வயது 57 ஆகிறது. அடி வாங்கிய பெண்ணுக்கு 27 வயதுதான். கிட்டத்தட்ட தனது மகள் வயதில் உள்ளவரை இப்படி முரட்டுத்தனமாக தாக்கிய ஸ்வப்னிலுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்