சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் முகப்புப் படத்தை போதைப் பொருள் விழிப்புணர்வு வாசகத்துடன் மாற்றியுள்ளனர்.
நாடு முழுவதும் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது போதைப் பொருட்கள் நடமாட்டம். கட்சி பாரபட்சமின்றி அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பலர் இதில் துணிகரமாக ஈடுபட்டுள்ளனர். அரசியல்வாதிகள், பல்துறைப் பிரமுகர்கள், காவல்துறையினர் அனைவரும் கை கோர்த்து இதில் ஈடுபடுவதால் இதை ஒழிக்க முடியாத நிலை நிலவுகிறது.
இந்த போதைப் பொருள் அட்டகாசத்தால் இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். சிறு வயதிலேயே போதைப் பொருளுக்கு அடிமையாகி, பல்வேறு சட்டவிரோத, குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் ஒரு 9 வயது சிறுமியை கொடூரமாக சிதைத்து கொன்ற கும்பலைச் சேர்ந்தவர்களில் பலர் பள்ளிச் சிறார்கள் என்று கூறப்படுகிறது. கஞ்சா போதையில்தான் இந்த கொடூரத்தை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர். அதில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் ஒரு நபருக்கு வயது 59 ஆகிறது. இவனும் கஞ்சா போதையில்தான் அட்டகாசம் செய்துள்ளான்.
இப்படி போதைப் பொருள் தலைவிரித்தாடி வருவதைத் தொடர்ந்து அதற்கு எதிரான வாசகத்தை தனது முகப்புப் படத்தில் மாற்றியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள டிவீட்டில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது.
கழகத்தின் தொடர்ச்சியான போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய டிவிட்டர் “X” தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}