அமைச்சர் கே.என் நேருவின்..மகன், தம்பி வீடுகளில்.. அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Apr 07, 2025,05:39 PM IST

சென்னை: அமைச்சர் கே.என் நேருவின் மகனான பெரம்பலூர் எம்.பி அருண் மற்றும் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில்  நடைபெற்று வருகிறது.


கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.பி.கே குழுமம் மற்றும் டி.வி‌.ஹெச் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூபாய் 100 கோடி  ரொக்க பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 


இதன் அடிப்படையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரான ரவிச்சந்திரன் நடத்தக்கூடிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அடையாறு தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி நகர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில்  இன்று அதிகாலை முதலே அமலாக்கத் துறையினர்  அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 




இதேபோல் ஆழ்வார்பேட்டையில் கே என் நேருவின் மகன் எம்.பி அருணுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் தற்போது அமலாக்க துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையை முன்னிட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



இந்த சோதனையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் எதுவும் நடைபெற்றதா என்ற கோணத்தில் அமலாக்க துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக மூத்த அமைச்சரான கே.என்  நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர் நோக்க திமுக தயாராகி வரும் நிலையில், திமுக அமைச்சர் மகன் மற்றும் தம்பி வீடுகளில் சோதனை நடைபெறுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்