"இந்தியாவிலேயே கல்யாணம்".. பிரதமர் மோடி சொல்றதும் சரிதானே.. யோசிக்க வேண்டிய விஷயம்தான்!

Nov 27, 2023,07:04 PM IST

டெல்லி: திருமணங்களை வெளிநாடுகளில் வைக்காமல் இந்தியாவிலேயே வைத்தால் இந்திய பொருளாதாரம் மேம்படும். திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அது நியாயமான கருத்துதான் என்று பலரும் கூறியுள்ளனர்.


எந்த நாட்டில் வேலை செய்து வந்தாலும், வசித்து வந்தாலும், கடைசியில் திருமணம் என்றால் தங்கள் பிறந்த ஊரில் வைப்பதை தான் வழக்கமாக எல்லாரும் பின்பற்றி வந்தார்கள். சிலர் பிறந்த ஊரை விட்டு வந்து நிறைய ஆண்டுகள் ஆகி விட்டதால், தாங்கள் தற்சமயம் வசித்து வரும் ஊரில் திருமணங்களை நடத்துவதும் வழக்கமாகி விட்டது. இப்போது அதுவும் மாறி வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்டு வர ஆரம்பித்து விட்டனர். 


மிகவும் செல்வச் செழிப்பில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்வதை கெளரவம் என்று தற்பொழுது நினைத்து வருகின்றனர். குறிப்பாக இந்திய பிரபலங்கள் பலரும் வெளிநாடுகளில் அதிகளவில் திருமணம் செய்து கொள்கின்றனர். தீபிகா படுகோனே- ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா - விராத் கோலி, ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா,  அம்பானி மகன்கள் திருமணம் என்று செல்லிக்கொண்டே போகலாம். இதனால் இந்திய பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது.






இன்னும் சிலர் சுற்றுலாத்தலங்கள் நிரம்பிய நாடுகளுக்குப் போய் வித்தியாசமான முறையில் திருமணம் செய்கின்றனர். அதாவது விமானத்தில் பறந்தபடி, பாராசூட்டிலிருந்து குதித்து கல்யாணம் செய்வது, நீருக்குள் மூழ்கியபடி கல்யாணம் செய்வது என்று வித்தியாசமாக யோசித்து கல்யாணம் செய்கின்றனர்.


இதைத் தான் மன் கி பாத் நிகழ்ச்சியின்  மூலமாக மோடி போசியுள்ளார்.   ஓவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருவது அனைவரும் அறிந்ததே. 

இந்த மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பேசும் போது,  இந்தியர்கள் சிலர் திருமணங்களை வெளிநாடுகளில்  வைக்கின்றனர். இது தேவை தானா? நமது நட்டிலேயே திருமணங்களை நடத்தினால், இந்திய பணம் இந்தியாவிலேயே இருக்கும். இந்திய பணம்  வெளியே எங்கும் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே இருக்கும். ஆகவே மக்கள் அனைவரும் வெளிநாடுகளில் திருமணங்கைள நடத்தாமல் நாட்டுக்குள்ளே திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியதுடன்  திருமணத்திற்கான பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று தெரிவித்துள்ளார்.


நியாயமான கருத்துதான்..!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்