அச்சச்சோ... புளி ஊற வைக்க மறந்துட்டீங்களா.. அப்படீன்னா மறக்காம இதை பாலோ பண்ணுங்க!

Feb 13, 2024,08:40 PM IST

சென்னை: வணக்கம் மக்களே.. பரபரப்பா சமையல் செய்யும் போது நாம் சில விஷயங்களை மறந்துருவோம் இல்லையா?  அது இயல்பானதுதான்.. எத்தனையைத்தான் ஞாபகம் வச்சுக்க முடியும். சிலது மறந்துதான் போகும்.. அதைத் தவிர்க்க முடியாதுதான்.


அதுக்குத்தான் சில ஈஸியான வழிமுறைகளை நான் கீழே சொல்லி இருக்கேன் ஃபிரண்ட்ஸ். மறக்காம படிச்சு தெரிஞ்சுக்கோங்க.


- பச்சை மிளகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, அதன் காம்பை கிள்ளிவிட்டு ஒரு கண்டைனரில் ஸ்டோர் பண்ணா ரொம்ப நாள் பிரெஷ்ஷா இருக்கும்.


- சமைக்கும் போது புளி ஊற வைக்க மறந்துட்டீங்களா? கவலை வேண்டாம். ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான புளி சிறிது தண்ணீர் சேர்த்து, அரைத்து வடிகட்டினால் புளித்தண்ணீர் தயார். இன்ஸ்டன்ட் ஆக சமையலுக்கு பயன்படுத்தலாம்.




- சில சமயம் நாம் அரைத்து வைக்கும் கோதுமை மாவில் வண்டு வந்துவிடும். வண்டு பூச்சி பிடிக்காமல் இருக்க, அரைத்த கோதுமை மாவில் சிறிது உப்பு கலந்தால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்.


- அதேபோல் உளுந்து டப்பாவில் பூச்சிகள் வராமல் இருக்க அதில் நான்கு வரமிளகாய் போட்டு வைக்க உளுந்தில் பூச்சிகள் வராது.


- சப்பாத்திக்கு மாவு பிசைந்து ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, பிசைந்த மாவின் மேலே நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் தடவி காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் மாவு அடுத்த நாள் மிருதுவாக இருக்கும்.


- நிறைய எலுமிச்சை வாங்கி வைக்கும் பொழுது பாதி அழுகிவிடும், அல்லது காய்ந்து விடும். எலுமிச்சை நீண்ட நாட்கள் நன்றாக இருக்க அதன் மேல் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வைத்தால் காய்ந்து போகாமல் இருக்கும்.


- முட்டையை வேகவைத்து உரித்து கிரேவி அல்லது குழம்பு வைத்து போர் அடிக்குதா? பச்சை முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் வேகவைத்து ஆறியபின் துண்டுகளாக நறுக்கி குழம்பு அல்லது கிரேவியில் சேர்த்தால் வித்தியாசமாகவும் இருக்கும். சுவையும் அருமையாக இருக்கும்.


-  மீன்களை நாம் கழுவும் போது கடைசியில் சிறிது கல்லுப்பு போட்டு கழுவினால் அதில் உள்ள செதில்கள் மற்றும் கெட்ட வாடை போய்விடும்.




- இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது, சிறிது உப்பு கலந்து அரைத்து, கண்ணாடி ஜாரில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் அதன் தன்மை மாறாமல் இருக்கும்.


- சர்க்கரை டப்பாவில் மூன்று அல்லது நான்கு கிராம்பு போட்டு மிக்ஸ் பண்ணி வைத்தால் எறும்புகள் பூச்சிகள் அண்டாது.


- ரவையை வாங்கி வந்தவுடன் வெறும் வாணலியில் போட்டு பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வறுத்தபின் ஏர்டைட் பாக்ஸில் போட்டு வைத்தால் உப்புமா,கேசரி செய்யும்போது ஈஸியாக இருக்கும்.


- ஸ்வீட் பண்ணும் போது ஏலக்காய் தூள் சேர்ப்போம்ல, நான்கைந்து ஏலக்காய்களை மிக்ஸியில் போட்டு அரைத்தால் அரைபடாது. அதற்கு இரண்டு ஸ்பூன் சர்க்கரையை ஏலக்காயுடன் சேர்த்து அரைக்க ஏலக்காய் நன்றாக அரைத்து விடும்.


- வீட்டில் சப்பாத்தி சுடும் போது, அடுப்பை ஹை ஃபிளேமில் வைத்து சுட்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். லோ பிளேமில் வைத்து சப்பாத்தி செய்தால் அப்பளம் போல் மொறு மொறுப்பாகி விடும்.


- சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவற்றை  பிரிட்ஜில் வைக்க கூடாது. ஒரு டிரே அல்லது தட்டில் வைத்து காற்றோட்டமான இடத்திலேயே வைக்க வேண்டும்.


ஓகே பிரண்ட்ஸ் சின்ன சின்ன குறிப்புகள் எல்லாம் புடிச்சிருந்ததா.. நீங்களும் இத மறக்காம ஃபாலோ பண்ணுங்க. நான் இன்னொரு ரெசிபி அல்லது டிப்ஸ் ஓட வரேங்க. நன்றிங்க.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்