நிலநடுக்கம்... மியான்மரில் பலி எண்ணிக்கை 1,000த்தை கடந்தது!

Mar 29, 2025,02:30 PM IST

பாங்காக்: மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தற்போது 1000த்தை கடந்துள்ளது.


மியான்மர் தலைநகர் நய்பியாடாவ் நகரிலிருந்து கிட்டத்தட்ட  250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் என்ற நகரில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.  இந்த நிலநடுக்கம் பாங்காக்கிலும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் வட பகுதி, பாங்காங்க்கிலும் மற்றும் சீனாவின் யுனான் மாகாணத்திலும் பூகம்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.


மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 1000த்தை கடந்துள்ளது. சுமார் 1600க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டுசக் மார்கெட் பகுதியில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்றும் தெரியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.




தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகேயும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கொடைக்கானலுக்கு செல்லும்.. வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்.. இன்று நள்ளிரவு முதல் அமல்..!

news

மராத்தி பேசாவிட்டால் பளார்னு அறையுங்கள்.. தமிழ்நாட்டின் தைரியம் நமக்கு வேண்டும்.. ராஜ் தாக்கரே

news

ஏப்,6ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம்: தமிழக காங், தலைவர் செல்வபெருந்தகை

news

தோனி கடைசி ஓவர்களில் களம் இறங்குவது ஏன் தெரியுமா?.. பிளமிங் சொல்லும் காரணம் இதுதான்!

news

கிப்லி டிரெண்டில் கை கோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.. அசத்தல் புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சி!

news

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? : டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து நானும் நிற்க தயார்: பவர் ஸ்டார் சீனீவாசன்!

news

Attn passengers: ஏப்ரல் 1 முதல் 30 வரை.. தென்காசி டூ செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து..!

news

நடிகர் கார்த்தி மற்றும் எஸ்‌.ஜே சூர்யா காம்போவில்.. சர்தார் 2 டீசர் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்