அதிகாலை வேளையில்.. கோலம் போட்டால்.. அன்றாட ஆரோக்கியம் அமர்க்களமாக இருக்கும்!

Jan 27, 2025,03:50 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை:  கோலமா.. அதுவும் அதிகாலையிலா.. அப்படீன்னு கேட்டு மிரள்பவரா நீங்க.. அப்படியெல்லாம் பயப்பாதீங்க... கோலம் போடுவது என்பதை சாதாரண விஷயமாக எண்ண வேண்டாம் ஃபிரண்ட்ஸ். நம் அன்றாட வாழ்க்கைக்கு அவசர வாழ்க்கைக்கும் எங்கே நேரம் இருக்கிறது என்று கோலமிடுவதை அலட்சியமாக எண்ணி விடாதீர்கள். கோலம் போடுவது நன்மைகள் ஏராளம் ஏராளம். அதைப் பார்ப்போம் வாங்க


கோலத்தினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி  முதல்ல தெரிஞ்சுக்குவோம்.




பெண்களுக்கு ஒவ்வொரு நாளும், வீட்டின் வாசலை சுத்தம் செய்து கோலம் இடுவதில் தான் துவங்குகிறது. அவர்கள் உடலை வளைத்து வாசலைப் பெருக்கி கோலம் போடும் பொழுது அவர்களுக்கு உடற்பயிற்சி ஆரம்பம் ஆகிறது. பொதுவாகவே பெண்களுக்கு முதுகு வலி எளிதில் வருகிறது. அவர்கள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும்போது முக்கியமாக கோலம் போடும்போது முதுகு எலும்பில் உள்ள பிரச்சனைகள் நீங்கி முதுகுத்தண்டு வலுவடைகிறது.


நம் தமிழ்நாட்டு கலாச்சாரத்துடன் ஒப்பிடும்போது கோலம் போடுவதில் பல மருத்துவ முக்கியத்துவம் அடங்கியுள்ளது. அதிகாலை எழும் பழக்கம் பல நன்மைகளையும் கொடுக்கிறது. விடியற்காலை சுத்தமான தூய்மையான காற்றை சுவாசிக்கலாம். உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படும்.


உடலை வளைத்து நாம் கோலம் போடும் பொழுது முதுகு எலும்பு யோகாசனம் எனப்படும் நிலையில் இருக்கும். யோகப் பயிற்சி முதுகெலும்பை வலுப்படுத்தும். இடுப்புக்கு நல்ல உடற்பயிற்சி கிடைக்கும். கோலத்தின் வடிவியல் வடிவமைப்பு லட்சுமி தேவியை வீட்டிற்குள் வரவழைக்கும். அதே வேளையில் தீய சக்திகளை விரட்டும்.


கோலம் என்பது மங்களகரம் மற்றும் நல்ல அதிர்ஷ்டம். மன நிம்மதி மன அமைதி கொடுக்கும். பச்சரிசி மாவினால் கோலம் போடும் பொழுது எறும்பு குருவி போன்ற ஜீவராசிகள் உண்ணும் பொழுது நமக்கு புண்ணியத்தை தரும். கோலத்தின் வடிவமைப்பு படைப்பாற்றலை அதிகரிக்கிறது.




புள்ளிக்கோலம், ரங்கோலி, சிக்கு கோலம் என்று அழகான பல வகைகளில் போடலாம். சிக்கு கோலம் போடும் திறன் உடையவர்கள் தங்கள் வாழ்க்கையில் வரும் எந்த வகையான பிரச்சினைகளையும் தீர்க்கும் திறன் உடையவர்களாக இருப்பார். கோலம் ஆந்திராவில் முக்கு என்றும் கர்நாடகாவில் ரங்கோலி ராஜஸ்தானில் மந்தானா சத்தீஸ்கரில் சவுக் புராண கேரளத்தில் பூக்கோலம் ஒரிசாவில் முரு ஜெல் பீகாரில் ஹரிப்பன் குஜராத்தில் சாத்தியல் என்று பல்வேறு மாநிலங்களில் பல பெயர்களில் அழைக்கின்றனர்.


இனிமையான இசையைக் கேட்டால் நம் மனம் அமைதி அடைந்து மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி அடைகிறோம் இல்லையா அது போல தான் ஜாமெட்ரிக் வடிவிலான கோலம் போடும் பொழுது நம் மனம் சாந்தமடைந்து நல்ல எண்ணங்கள் மலரும். ஒரு வீட்டின் அழகை அதன் வாசலை பார்த்து கணித்து விடலாம்.


நம் வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் வாசலில் போட்டுள்ள கோலத்தை பார்க்கும் பொழுது அவர்களின் மனநிலை மன அமைதி அடைந்து நல்ல எண்ணங்கள் பிறக்கும். இதனை மருத்துவர்கள் சைமா தெரபி என்று அழைக்கிறார்கள். நம் செயல்பாட்டுத் திறன் வளரும். ஆய்ந்தறிதல் மேன்மை கொள்ளச் செய்யும். இது யோகத் தன்மையடைய சிறந்த பயிற்சி நேர்மறை எண்ணங்கள் வளரும்.


வீட்டில் அழகுக்காக, நேரமின்மை காரணத்தினால் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அப்படி ஒட்டினாலும் நல்ல நாட்கள் பண்டிகை நாட்களில் சிறிது நேரம் ஒதுக்கி கோலம் இடுவது சிறப்பு. அதனால் தான் பள்ளிகளில் கல்லூரிகளில் அடுக்குமாடுகளில் கோலப்போட்டி என்பது சமீப காலங்களில் பெருகி வருவது வரவேற்கத்தக்கது.




பண்டிகைகள் விழாக்கள் திருமணம் போன்ற எல்லா விஷயங்களிலும் கோலம் முதன்மையாக விளங்குகிறது. நம் முன்னோர்களின் ஒவ்வொரு பழக்கத்திலும் ஆன்மீகம் அறிவியல் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. இதிலிருந்து புரிகிறதா, நமக்கு அதிகாலை கோலம் அன்றாட ஆரோக்கியம் ஆரம்பம் என்பது.


ஸோ, நாளைல இருந்து ஜாலியா கோலம் போட ஆரம்பிங்க சிஸ்டர்ஸ்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்



சமீபத்திய செய்திகள்

news

மினி பஸ்களில்.. இனி மினிமம் டிக்கெட் ரூ. 4.. அதிகபட்சம் 10 ரூபாய்.. புதிய கட்டண விகிதம் அறிவிப்பு

news

வெயில் தொடங்கி விட்ட போதும்.. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

ஸ்ரீஹரிகோட்டாவில் செஞ்சுரி அடிக்கும் இஸ்ரோ.. நாளை 100வது செயற்கைக் கோளை ஏவுகிறது!

news

தலித் ஊழியரை பொய் வழக்கில் சிக்க வைத்ததாக.. இன்போசிஸ் இணை நிறுவனர் உள்ளிட்டோர் மீது வழக்கு

news

ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் அருகே.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி அன்பு!

news

தமிழக வெற்றிக் கழகத்தில்.. அடுத்தபடியாக.. பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவு!

news

வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த ஒரே முதல்வர் யார் தெரியமா.. டாக்டர் அன்புமணி பேச்சு

news

சீமான் என்ன பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா?.. விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

news

அமெரிக்கா செல்லவுள்ளார் பிரதமர் மோடி.. டிரம்ப்புடன் முக்கியப் பேச்சு.. எப்போது, எத்தனை நாட்கள்?

அதிகம் பார்க்கும் செய்திகள்