திண்டுக்கல்: ரூ. 20 லட்சம் லஞ்சப் பணத்துடன் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 மணி நேர விசாரணைக்குப் பின்னர் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி இன்று திண்டுக்கல் அருகே ரூ. 20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார். திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரின் வழக்கை முடிப்பதற்காக அவரிடம் ரூ. 3 கோடி வரை லஞ்சம் கேட்டதாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் அவரை கட்டாயப்படுத்தி ரூ. 20 லட்சம் லஞ்சத்தை அவர் வாங்கியதாகவும் தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட அரசு டாக்டர், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் இதுதொடர்பாக முன்கூட்டியே புகார் அளித்துள்ளார். போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், கெமிக்கல் தடவிய ரூபாய் நோட்டுக்களை அங்கித் திவாரியிடம் அந்த டாக்டர் கொடுத்துள்ளார். அதை வைத்து அங்கித் திவாரியை சேஸ் செய்து போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
அதைத் தொடர்ந்து அவரை 15 மணி நேரமாக தீவிர விசாரணைக்குட்படுத்தினர். இந்த விசாரணையின்போது அங்கித் திவாரி பல்வேறு முக்கியத் தகவல்களைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது லஞ்சப் பணத்தில் பல அதிகாரிகளுக்கு பங்கு போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்ட பல உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார் அங்கித் திவாரி என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் பிரதமர் அலுவலகத்தின் பெயரையும் பயன்படுத்தியுள்ளார் என்ற தகவல் அதிர வைத்துள்ளது. பல்வேறு விதமாக டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்டியுள்ளார் அங்கித் திவாரி. உயர் அதிகாரிகளுக்குப் பங்கு தர வேண்டும் என்றும் அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். கடுமையாக மிரட்டித்தான் டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்டி பணம் பெற்றுள்ளார் அங்கித் திவாரி.
அவரது கைதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தென் மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனையில் இறங்கினர். அவர்களை முதலில் உள்ளே விட அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால் போலீஸார் கடுமையாக வாதிட்டும், எச்சரித்ததையும் தொடர்ந்து அதிகாரிகளை உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து கடந்த 3 மணி நேரமாக அங்கு சோதனை நடந்து வருகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து அங்கித் திவாரியை, திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மிக மிக துல்லியமாக திட்டமிட்டு இந்த கைது நடவடிக்கையை அதிரடியா மேற்கொண்டுள்ளனர். இது தேசிய அளவில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
{{comments.comment}}