சென்னை: அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தனது பாணியில், அது அண்ணன் துரை முருகன் அவர்களுக்கு ஏமாற்றமாகவும், தம்பி உதயநிதிக்கும் ஏற்றமாகவும் இருக்கும் என்று கலாய்த்துள்ளார்.
சிவந்தி ஆதித்தனாரின் 89ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் ஆளுநர் தமிழிசை. அதன்பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சிவந்தி ஆதித்தனாரின் 89ம் ஆண்டு பிறந்த நாளில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வந்து அஞ்சலி செலுத்தியதற்கு பெருமை கொள்கிறேன்.
வருடா வருடம் வரும் பொழுது, அவர் எந்த அளவிற்கு ஊடகத்திற்கும், சமூகத்திற்கும், ஆன்மீகத்திற்கும், விளையாட்டிற்கும் சேவை செய்தார் என்பதை நாம் ஒவ்வொரு முறை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்வது வழக்கம். குறிப்பாக இன்று பாரா ஒலிம்பிக்காக இருக்கட்டும், ஒலிம்பிக்காக இருக்கட்டும் பல சாதனைகளை நமது விளையாட்டு வீரர்கள் செய்து வருகின்றார்கள். பதக்கங்களை பெற்று வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்து அதற்கு அடித்தளம் இட்டவர் சிவந்தி ஆதித்தனார்.
காலை பத்திரிக்கையான தினத்தந்தியை எளிதாக மக்களுக்கு எடுத்துச் சென்றவர். அடுத்த நாள் வரைக்கும் பத்திரிக்கை வரவில்லை என்றால் அதற்காக மாலை பத்திரிகையும் கொண்டு வந்து ஒரு புரட்சியை செய்தவர். சிவந்தி ஆதித்தனார் அவருக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன். என்னை பொருத்தமட்டில் தனிப்பட்ட முறையில் எனது வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். மக்களுக்கு விளையாட்டு குறித்து விழிப்புணர்வு இல்லாத பொழுதும் விளையாட்டிற்கு பல ஊக்கத்தை கொடுத்திருக்கிறார்.
மாற்றம் - ஏமாற்றம் - ஏற்றம்!
அழுத்தம் இப்பொழுது பழுத்துக்கொண்டு வருகிறது. ஏமாற்றமாக இருக்காது என்றால் யாருக்கு ஏமாற்றமாக இருக்காது. யாருக்கு ஏற்றமாக இருக்கும் என்பது தான். அண்ணன் துரை முருகன் அவர்களுக்கு ஏமாற்றமாகவும், தம்பி உதயநிதிக்கு ஏற்றமாக இருக்கும். அல்லது யாரெல்லாம் ஏற்றம் பெற போகிறார்கள். யார் எல்லாம் ஏமாற போகிறார்கள் என்பது தான். நிச்சயமாக எல்லோருக்கும் ஏற்றமாக இருக்கப்போவது இல்லை. இது முதலில் இருந்தே பரவ விட்டு பரவ விட்டு தம்பி உதயநிதிக்கு முடிசூட்டு வதற்காக தான் பரவ விட்டு கொண்டிருக்கிறார்கள்.
எங்களை பொருத்தமட்டில் வாரிசு அரசியல் என்பது பல முதியவர்கள், அனுபவசாலிகள் எல்லாம் இருக்கும் போது இவர்களை போன்றவர்கள் வருவது என்பது அரசாங்கத்திற்கும் நல்லது அல்ல. ஆட்சிக்கும் நல்லது அல்ல. ஜனநாயகத்திற்கும் நல்லது அல்ல என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கவுண்டர் பண்ணுகிறார்களா? அல்லது என்கவுண்டர் பண்ணுகிறார்களா என்று தெரியவில்லை. என்கவுண்டர்கள் தற்போது அதிகமாக இருக்கிறது. எதற்கு கோர்ட்டு எதற்கு கேஸ். தவிர்க்க முடியாத காரணங்களாக இருந்தால் பரவாயில்லை. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 17 எண்கவுண்டர்கள் நடைபெற்று இருக்கிறது. யாரையோ காப்பாற்றுவதற்காக எண்கவுண்டர்கள் நடக்கிறது. திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தற்பொழுது வெவெலத்து போயுள்ளது என்பது தான் உண்மை என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}