பிரித்து எடுத்த பேய் மழை.. திக்கித் திணறிய யுஏஇ... விமானங்கள் ரத்து, பள்ளி கல்லூரிகள் மூடல்

May 03, 2024,06:08 PM IST

துபாய்:  மீண்டும் ஒரு பேய் மழையை துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் சந்தித்துள்ளன. இதன் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணி புரிய உத்தரவிட்டுள்ளன. பூங்காக்கள், கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




சில வாரங்களுக்கு முன்புதான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேய் மழை பெய்து  மக்களை ஸ்தம்பிக்க வைத்தது. பலர் அதில் உயிரிழந்தனர். நகரங்கள் பலவற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடிய காட்சிகளை மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பேய் மழை திரும்ப வந்தது. நேற்றும் இன்றும் புரட்டிப் போட்ட பெரு மழையால் பல ஊர்கள் வெள்ளக்காடாகியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.


துபாயில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.  கடற்கரைகள், பூங்காக்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்தியாவைச் சேர்ந்த இன்டிகோ நிறுவனம் துபாய், ஷார்ஜா, ரஸ் அல் கைமா, அபுதாபிக்கு இயக்கி வரும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  வருகை, புறப்பாடு ஆகியவற்றில் தாமதம் மற்றும் சிக்கல் நிலவுவதாக அது தெரிவித்துள்ளது.


கடந்த மாதம்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேய் மழை பெய்தது. 1949ம் ஆண்டுக்குப் பிறகு பெய்த மிகப் பெரிய மழையாக இது பதிவானது. இதனால் பல ஊர்கள் வெள்ளத்தில் சிக்கி மிதந்தன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. துபாய் விமான நிலையமே வெள்ளத்தில் சிக்கி மூழ்கியதையும் மக்கள் பார்த்து அதிர்ச்சியுற்றனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்