5 உச்ச நடிகர்களுக்கு.. ஒரே நேரத்தில் இசையமைக்கும்.. தேவி ஸ்ரீ பிரசாத்.. நெகிழ்ச்சி!

Mar 19, 2024,03:02 PM IST

சென்னை: அஜித், சூர்யா, தனுஷ், விஷால், அல்லு அர்ஜுன் என ஐந்து முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படத்திற்கு ஒரே நேரத்தில் இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதே எனது கடமையாக கருதுகிறேன் என  நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


தமிழ் திரையுலகில் இனிது இனிது காதல் இனிது திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் இசையமைப்பவர். இது தவிர இவருடைய பாடல்கள் பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 21 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி ரசிகர்கள் ஒன்றாக கூடும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவது இவருடைய சிறப்பு. 




இவரின் அதிரடி இசையில், இவர் இசையமைக்கும் அனைத்துப் பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஒட்டு மொத்த திரை உலகையே ஈர்த்துள்ளது. இவரை ரசிகர்கள் செல்லமாக டிஎஸ்பி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். சமீபத்தில் இவர் இசையமைத்து வெளிவந்த புஷ்பா திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் முதல் முறையாக ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் ஹிட் கொடுத்தது. இது இவருடைய சாதனைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. 


இவருடைய இசையை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமே ரசிப்பது மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் ரசித்து கொண்டாடி வருகின்றனர். இவருடைய இசை கடல் கடந்து வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் புகழ்பெற்றிருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது ஐந்து முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு  ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். அதில்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் குபேரா திரைப்படம், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்தினம் திரைப்படம், மற்றும் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 ஆகிய படத்திற்கு இசையமைத்து வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.




இது தவிர ஹரிசங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் உஸ்தாத் பகத்சிங், நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் தாண்டேல், புது முகங்கள் நடிக்கும் ஜூனியர் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இசைஞானி இளையராஜாவின் அதிதீவிர பக்தரான தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவிற்கு, சமீபத்தில் இளையராஜா நேரில் சென்று வாழ்த்தி உள்ளார். இது அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இது பற்றி தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில், என்னுடைய இசைப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு  எனது மனமார்ந்த நன்றி. ஐந்து முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதே எனது கடமையாக கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்