சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். அதே சமயத்தில் அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.
8.2.24 மற்றும் 9.2.24 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும்.
லைட்டா மழை பெய்ய வாய்ப்பு
10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஏனைய இடங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட பல இடங்களில் இப்போதே லேசாக வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்திருக்கிறது. கோடை காலம் நெருங்கி வருவதால் வெயிலைச் சந்திக்க மக்களும் ஆயத்தமாகி வருகின்றனர். பல இடங்களில் பகலில் நன்றாக வெயில் சுட்டெரிக்கவும் ஆரம்பித்துள்ளது.
புயலையும் பார்த்தாச்சு.. 2 பெரு வெள்ளத்தையும் பார்த்தாச்சு.. இந்த வெயிலையும் ஒரு கை பார்த்துடுவோம்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}