முருங்கைக்காய்க்கு வந்த வாழ்வை பாருங்க மக்களே... ஒரு கிலோ 400க்கு விற்பனை!

Dec 05, 2024,06:19 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூபாய் 400க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் முருங்கைக்காய் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் சற்று அதிகமாகவே உள்ளது. இருப்பினும் முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முருங்கைக்காயின் வரத்து குறைவே இதற்கு முக்கிய காரணமாக வணிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.




இனி சம்பார் வைக்க முருங்கைக்காயை வாங்க முடியாது போல என்று முருங்கைக்காய் பிரியர்கள் புலம்பி வருகின்றனர். ஒரு காலத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓசியாக கொடுத்துக் கொண்டிருந்த இந்த காய் தற்போது காசு கொடுத்து கூட வாங்க முடியாத நிலையாக மாறி விட்டது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம் விவசாயத்தை பேணி காக்காதது தான் போலும். இன்றைக்கு முருங்கைக்காய்க்கு வந்த நிலை நாளை மற்ற காய்கறிகளுக்கும் வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்று  மக்கள் அங்கலாய்க்கின்றனர்.


05.12.2024  இன்றைய காய்கறி விலை....


தக்காளி ரூ 60-100

இஞ்சி 60-130

பீன்ஸ் 30-50

பீட்ரூட் 30-55

பாகற்காய் 40-60 

கத்திரிக்காய் 30-60

பட்டர் பீன்ஸ் 60-85

முட்டைகோஸ் 15-30

குடைமிளகாய் 20-55

மிளகாய் 40-60

கேரட் 40-70

காளிபிளவர் 20-40

சௌசௌ 25-50

கொத்தவரங்காய் 25-40 

தேங்காய் 50-90

பூண்டு 220- 540

பச்சை பட்டாணி 150-160 

கருணைக்கிழங்கு 20-40

கோவக்காய் 30-40

வெண்டைக்காய் 30-60 

மாங்காய் 30-60 

மரவள்ளி 30-55

நூக்கல் 15-40 

பெரிய வெங்காயம் 40-80 

சின்ன வெங்காயம் 50-80

உருளை 40-80

முள்ளங்கி 20-30

சேனைக்கிழங்கு 20-40

புடலங்காய் 20-30

சுரைக்காய் 15-30

பூசணி 20-45

முருங்கைக்காய் 400-420

வாழைக்காய் (ஒன்று) 3-7



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எப்ஐஆர் நகல் வெளியானது சட்டப்படி குற்றம்.. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. போலீஸ் கமிஷனர் அருண்

news

Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!

news

Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி

news

Annamalai: சவுக்கடி, செருப்பு புறக்கணிப்பு, கடும் கோபம்.. வரலாறு காணாத ஆவேசம் காட்டிய அண்ணாமலை!

news

Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!

news

Nallakannu: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

news

Rajinikanth -Sivakarthikeyan meet D Gukesh.. அடுத்தடுத்து சர்ப்பிரஸை அனுபவித்த டி. குகேஷ்!

news

Tsunami: சுனாமி ஆழிப்பேரலை தாண்டவமாடி 20 வருஷமாச்சு.. மீனவர்கள் குடும்பம் குடும்பமாக அஞ்சலி!

news

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு.. ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்