சென்னை: மலையாள நடிகர் கலாபவன் மணியின் கதையைக் கேட்கவே பகீர் என்று இருக்கிறது. அப்படியே ஈரக்குலையெல்லாம் ஆடிப் போகிறது. அந்த அளவுக்கு மிக மிக மோசமான குடிகாரராக அவர் இருந்துள்ளார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.. கூடவே குடிக்கு அடிமையானவர்களை நினைத்து அயர்ச்சியும் ஏற்படுகிறது.
மலையாளத்தில் பிரபலமான நடிகர் கலாபவன் மணி. தமிழிலும் நிறையப் படங்கள் நடித்துள்ளார். ஜெமினி படம்தான் அவருக்கு மிகப் பெரிய பிரபலத்தைக் கொடுத்தது. தொடர்ந்து எந்திரன், புதிய கீதை, பாபநாசம், ஜே.ஜே, உனக்கும் எனக்கும், குத்து, வாஞ்சிநாதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கலாபவன் மணி.
2016ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் சடலமாக கிடந்தார் கலாபவன் மணி. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவரது குடலில் எத்தனால், மெத்தனால் இருந்ததாக கூறப்பட்டது. விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இதுதொடர்பாக பலரிடம் விசாரணையும் நடத்ததப்பட்டது. சிபிஐயும் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் கலாபவன் மணி மரணத்திற்குக் காரணம் அவரேதான் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அளவுக்கு அதிகமாக மது அருந்தி தனது மரணத்தை தானே வரவழைத்துக் கொண்டுள்ளார் மணி என்று விசாரணை அதிகாரியான உன்னி ராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கலாபவன் மணி பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். தினமும் 10 முதல் 12 பாட்டில் பீர் குடித்து வந்துள்ளார். இதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி பாதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர் குடியை நிறுத்தவில்லை. விடாமல் குடித்து வந்துள்ளார்.
ரத்த வாந்தி வந்தும் கூட பீர் குடித்து வந்துள்ளார். அவரது ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் அதிகளவு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை மோசமாகி மரணம் சம்பவித்தது என்றார்.
குடிபழக்கத்தால் ஒரு மனிதன் எந்த அளவு அடிமையாகி போகிறான் என்பதற்கு உதாரணமாக கலாபவன் மணியின் மரணத்தை எடுத்துக் கூறலாம். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தான் உடல் நலம் பாதித்தும் கூட, அதைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் விடாமல் குடித்து தனது வாழ்க்கையே இழந்துள்ளார்.
குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்பது பழைய மொழி. இன்று குடி ஒரு மனிதனின் சிந்தனையையும் சேர்த்து அழித்து விடுகிறது.. அதற்கு கலாபவன் மணி ஒரு உதாரணம். மிக மோசமான குடிப்பழக்கத்தால் ஒரு நல்ல நடிகரை இழந்துள்ளோம். இவர் பிரபலம்.. குடும்பத்திற்குப் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை.. ஆனால் சாமானியர்களின் நிலை அப்படியா?
ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் குடிக்கு அடிமையாகி உடல் நலம் பாதித்து இறந்து போனால், அவரது மனைவி, பிள்ளைகளின் வாழ்க்கை நிலை கேள்விக்குறியாக மாறி விடுகிறது. குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படுவது குடிப்பவர் மட்டும் அல்ல. அவரது குடும்பமும் தான். குடிப்பவர் குடித்து விட்டு அவரது வாழ்க்கையை அவருக்கு தெரிந்த விதத்தில் என்ஜாய் செய்து விடுகிறார்.. அதற்கு பரிசாக மரணம்தான் அவருக்கு வந்து சேரும்.. அதை அவர் குடிக்கும்போது உணர்வதே இல்லை.. அவரது கஷ்டம் அத்தோடு முடிந்து விடுகிறது. ஆனால் இறந்தவரின் குடும்பத்தின் நிலை???
ஒரு புறம் பிள்ளைகள் அனாதையாகின்றனர். மனைவி ஆதரவை இழக்கிறார்.. குடும்பமே தள்ளாடும் சோகம் சூழ்கிறது. வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு முன்னரே பிள்ளைகளின் வாழ்க்கை இருண்டு விடுகிறது. சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் வாழும் நிலை ஏற்படுகிறது. ஆண் பிள்ளைகள் என்றால் அவர்களும் வாழும் வழி தெரியாது கஞ்சா, குடி பழக்கம் என்று தகப்பன் வழியில் திசை திரும்பும் பலரை நாம் பார்க்கிறோம்.. தந்தை இல்லாமல், தாயும் சிரமப்படும் சூழலில் பெண் பிள்ளைகளும் தவறாகப் போகும் வாய்ப்பையும் நாம் பார்க்கிறோம்.
வாழ வழி தெரியாமல் பிழைப்பிற்காக பாதை மாறுபவர்கள் ஒருபுறம் இருக்க, காம வெறி கொண்ட மிருகங்களின் கையில் சிக்கி சீரழிபவர்கள் எத்தனை எத்தனையோ பேர். பெரும்பாலான குடிகாரர்கள் பெற்ற பிள்ளைகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது. இது எதுவும் இறந்த குடிகார தந்தைக்கு தெரிய போவதும் இல்லை.
குடிகாரர்களால் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்கவே வேண்டாம். தினம் தினம் :சண்டைதான்.. வாழ்க்கை நரகம் தான். ஒரு நல்ல நாள், மாசப்பிறப்பு என்று எதுவுமே அவர்களுக்கு இல்லை. தினமும் வாழ்க்கையில் பேராட்டம் மட்டுமே. தினமும் குடித்து விட்டு வீட்டில் வீம்பாக சண்டை இழுத்து மனைவியை தெருவில் இழுத்து போட்டு அடிக்கும் குடிகாரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.
குடிக்கும் முன்பு ஒரு நொடி இதை எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்களேன்.. விட்டு விடுங்க பாஸ் இதெல்லாம் வேண்டாம்.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.. குடி அழிவுக்கே வித்திடும்.. உஷாரா இருங்க
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}