வாட்டர் மட்டுமில்லை பாஸ்.. "டிடாக்ஸ்" வாட்டரும்.. உடம்புக்கு ரொம்ப நல்லது!

Aug 14, 2023,02:05 PM IST
- மீனா

"நீரின்றி அமையாது உலகு "என்பது பழமொழி. எத்தனை சத்தியமான வார்த்தை இது..  எப்படி காற்று பூமிக்கு முக்கியமோ, அவசியமோ அதேபோலத்தான் நீரும். வெறும் தண்ணீரைப் போலவே, "இந்த நீரை"யும் எடுத்துக் கொண்டால் கொழுப்பின்றி அமையும் உடல் என்ற கூற்றை நிஜமாக்கலாம்.

தண்ணீர் குடித்தால் கொழுப்பு குறையுமா என்று நீங்கள் ஆச்சரியமாக பார்க்கிறீர்கள் தானே. அட ஆமாங்க, அதுதான் "டி டாக்ஸ் வாட்டர்" என்பது. பொதுவாக நம் உடலுக்கு தண்ணீர் குடிப்பது என்பது எவ்வளவு முக்கியமானது, என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த தண்ணீரில் சில பொருட்களை சேர்த்து ஊறவைத்து குடிக்கும்போது அது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நம் உடலை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நம் முகத்திற்கு  நல்ல பொலிவையும் தருகிறது. 

அது மட்டுமல்ல, நம் உடல் எடையை குறைக்க முயற்சி எடுக்கும் நேரத்தில் அதிகமான தண்ணீ���் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால்  வெறும் தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள சில பேர் விரும்பமாட்டார்கள். ஆனால் இந்த மாதிரி ஃபிளேவர்ஸ் சேர்த்த டீ டாக்ஸ் தண்ணீரை நாம் எடுத்துக் கொள்ளும்போது, நம் உடல் எடை சீக்கிரமாக குறைவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். அந்த தண்ணீரை எப்படி செய்வது, அதனுடன் சேர்க்கும் பொருள் என்னென்ன, எப்படி பயன்படுத்துவது என்று தான் நாம் பார்க்க போகிறோம். வாங்க பார்க்கலாம்

இஞ்சி+எலுமிச்சை+ மல்லியிலை:

ஒரு எலுமிச்சை பழத்தை ஸ்லைஸ் ஆகவும்,  சிறு துண்டு இஞ்சியை பொடியாகவும் வெட்டி எடுத்துக் கொள்ளவும். சிறிதளவு மல்லி இலைகளையும்  நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1 அல்லது 11/2 லிட்டர் தண்ணீரில் இவை மூன்றையும் சேர்த்து இரவே ஊறவைத்துவிட  வேண்டும். இப்படி இரவு முழுவதும் வைக்கும் பொழுது இதில் உள்ள இஞ்சி, எலுமிச்சை,  மல்லியிலையின் ப்ளேவர்ஸ் இதில் நன்கு  கலந்துவிடும். பிறகு காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி அன்று முழுவதும்  நாம் குடிக்கலாம்.



இஞ்சி +புதினா+ ஆரஞ்சு பழம்+எலுமிச்சை ஜூஸ்:

சிறு துண்டு இஞ்சி, புதினா இலைகள் 10, விதை நீக்கிய ஆரஞ்சு பழம் ஆறு துண்டுகள், இவற்றை எல்லாவற்றையும் 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்து, இதனுடன் சிறிது எலுமிச்சை சாறையும் சேர்த்து இரவு முழுவதும் அப்படியே ஊற வைத்து விட வேண்டும். பிறகு காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம்.

ஆரஞ்சு பழம் +எலுமிச்சை பழம்+ வெள்ளரிக்காய்:

எலுமிச்சை பழத்தையும் வெள்ளரிக்காயும் நீளமான  துண்டுகளாக  வெட்டி எடுத்துக் கொள்ளவும் .விதை நீக்கிய ஆரஞ்சு துண்டுகள் ஐந்து இவை அனைத்தையும் 1 லிட்டர் அல்லது 11/2 லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு நன்கு ஊற வைத்து பிறகு வடிகட்டி  குடிக்கலாம்.

எலுமிச்சை பழம் +இஞ்சி+ புதினா+ லவங்கம்:

வெட்டிய ஒரு எலுமிச்சை பழத்துடன், சிறிது இஞ்சியை துருவி எடுத்துக் கொள்ளவும். புதினா இலைகள்5, 3 லவங்கம் இவை அனைத்தையும் 1 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து பிறகு வடிகட்டி  இதையும் குடிக்கலாம்.

ஆப்பிள்+ இஞ்சி+ திராட்சை:



வெட்டிய நான்கு துண்டு ஆப்பிள், சிறிய இஞ்சி துண்டுகளுடன், 10 திராட்சைப்பழம் இவை மூன்றையும் சேர்த்து ,1 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் இதை வடிகட்டி நாம் குடிக்கலாம்.
இவ்வாறு வெறும் தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக இந்த மாதிரி ப்ளேவர்ஸ் தண்ணீரில் சேர்த்து குடிக்கும் போது, நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும் கரைத்து நமக்கு  புத்துணர்ச்சியையும் தரும்.

இந்த தண்ணீரை இரவு ஊறவைக்கும் பொழுது காலையில் இருந்து மாலைக்குள் இதை முழுவதும் குடித்து முடித்து விட வேண்டும், இல்லை என்றால், காலையில் ஊற வைக்கும் பொழுது இரவு 8 மணிக்குள் முழுவதும் குடித்து முடித்து விட வேண்டும்.  இந்த தண்ணீரை குடிப்பதினால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமைகிறது. 

பிறகென்ன பாஸ், இத்தனை நன்மைகள் இருக்கும் போது, இதை நீங்களும் கூட முயற்சி செய்து பாருங்களேன். குடிச்சுப் பார்த்துட்டு ரிசல்ட்டை சொல்லுங்க.. நாலு பேருக்கு அது உதவும்ல!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்