சென்னை: நான்கு கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது. இனிமேல் வருவதெல்லாம் போனஸ் தான். மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமர் ஆவார் என தென் சென்னை பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. வரும் மே 20 ஆம் தேதி 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் தென் சென்னை வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நான்கு கட்ட தேர்தல்கள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வந்தே பாரத் ரயில் மிகவும் வசதியாக உள்ளது. அதனால் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுதான் நம் நாட்டின் வளர்ச்சி. நம்ம பாரத பிரதமரை நான் எப்போதுமே பாராட்டுவேன்.
ரேடியோவை நாம் மறந்து இருந்தோம். ஆனால் பாரத குரல் என, ரேடியோவை எல்லோரையும் கேட்க வைத்தார். போஸ்ட் ஆபீஸை எல்லாரும் மறந்து இருந்தோம் .அப்ப போஸ்ட் ஆபீஸ்ல செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற சேமிப்பு திட்டங்களை ஏற்படுத்தி பழங்கால போஸ்ட் ஆபீஸ்களை கூட பயன்படுத்த முடியும் என்பதை கொண்டு வந்தார்.
அதேபோல் ரயிலை எல்லோரும் மறந்து இருந்தோம். அந்த நேரத்தில் வந்தே பாரத் என்ற ரயிலில் வேகமாக போக முடியும் அப்படிங்கிற திட்டத்தை ஏற்படுத்தினார். இதுதான் வளர்ச்சி. ஆனா இந்த வளர்ச்சி எல்லாம் பேசாம ஏதோ பிரதமர் நாட்டில் பிரிவினை பிரிவினையை பேசுகிறார் என தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பிரச்சாரம் நடக்கிறது.
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இன்று கூட பிரதமர் என்ன சொல்லி இருக்கிறார் 100 நாட்களில் ஆட்சிக்கு வந்த உடனையே அடுத்த 25 நாட்களில் இளைஞர்களிடம் முற்றிலும் ஒப்படைப்பேன் என கூறியிருக்கிறார். ஆக இப்படி ஒரு தொலைநோக்குப் பார்வையுடைய பிரதமர்தான் வேணும். ஆனா இங்க உள்ள இந்தியா கூட்டணியாக இருக்கட்டும்.. திமுகவாக இருக்கட்டும்.. காங்கிரஸாக இருக்கட்டும்.. இதை ஒரு பிரிவினை வாதமாக பேசிக்கொண்டே போவது சரி இல்லை. இதை மக்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள்.
நான்கு கட்ட தேர்தலிலும் பாஜக, என் டி ஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது. இனிமே வருவதெல்லாம் போனஸ் தான். அதனால் எந்த சந்தேகமும் இல்லை. பதட்டமும் இல்லை. நிச்சயமாக மத்தியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தான் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார். அவர் மதரீதியாக எந்த இடத்தையும் பிளவுபடுத்தவில்லை. இணைக்கத்தான் செய்கிறார்.
பெண்களுக்கு முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் கிடைத்திருக்கிறது. ஹஜ் பயணித்திற்கு பெண்களை அனுப்புவதற்கு எல்லா முயற்சிகளும் எடுத்திருக்கிறார். எல்லா திட்டங்களும் இஸ்லாமிய மக்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் சேர்த்து தான் கொடுத்திருக்கிறார். காங்கிரஸ்தான் அதை பிரித்துக் கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}