ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்தான்.. அதை யாரும் மறுக்க முடியாது.. டாக்டர் தமிழிசை

May 27, 2024,06:16 PM IST
சென்னை: ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தென்சென்னை பாஜக வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சிகள் வேண்டும் என்றே ஏதோ பிரித்தாளுகின்றது  போல பிரச்சாரம் செய்து வருகின்றனர். வரும் நான்காம் தேதி அதற்கான பதில் கிடைக்கும். ஏனென்றால் ஸ்டாலின் சொல்கிறார் மதவாதத்திற்கு எதிராக தீர்ப்பு வரும் என்று. இங்கு மதவாதமே இல்லை. மனிதவாதம் தான் இங்கு இருக்கிறது. 



மனிதர்களை மனிதர்களாக நினைத்து அத்தனை திட்டங்களையும் செய்து வருகிறோம். பாரத பிரதமரை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள். ஆனால் அவரது திட்டங்கள் எல்லாம் மக்களை போய் சேர்ந்து விட்டது. இதை நீங்கள் மறுக்கவே முடியாது. பல நிகழ்ச்சிகளில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள். திட்டங்கள் எல்லாம் மறைக்கப்படுகிறது. சாலையோர வியாபாரியிடம் கேட்கிறார்கள். நாங்கள் எல்லாம் இன்று கொரோனாவைத் தாண்டி வாழ்கிறோம் என்றால் அது பாரத பிரதமரால் தான் என்று. அதனால் எங்கள் ஓட்டு பிரதமருக்கு தான் என்று சொல்கிறார்கள். ஆகையால் இந்த பிரித்தாளும் அரசியல் தமிழகத்தில் ஸ்டாலின் போன்றவர்களால் தான் செய்யப்படுகின்றது.

பிரதமர் இதுவரை 64 பேட்டிகளை கொடுத்திருக்கிறார் அவற்றில் எல்லாம் தெளிவாக சொல்லியிருக்கிறார். நிச்சயமாக 4ம் தேதி ஒரு வலுவான அரசு மத்தியிலும் மாநிலத்திலும் அமையும். வலுவான கட்சியாக பாரதிய ஜனதா வெற்றியை பெறும். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் தான். அவர் கர சேவையை ஆதரித்தார். அவர் ஆதரித்த போது அதிமுக தலைவர்கள் எதிர்த்து இருக்கலாமே. ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால் நிச்சயமாக அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று பால ராமரை வழிபட்டு வந்திருப்பார். மேலும் இந்தியாவின் பல நூற்றாண்டு கனவு நினைவாகி இருக்கிறது என்று அழுத்தமாக தனது கருத்தை பதிவு செய்து இருப்பார்.

கோயில்களில் எல்லாம் அன்னதான  திட்டத்தை கொண்டு வந்தவர். அதிமுகவில் உள்ள தலைவர்களுமே இதே கொள்கைகளில் தான் இருந்தார்கள். ஜெயலலிதா கர சேவையை ஆதரித்த போது இன்று எதிர்த்து பேசுகிறவர்கள் எல்லாம்  அப்போது எதிர்த்து பேசினார்களா?  இது குறுகிய வட்டம் இல்லை. பரந்த வட்டம். ஜெயலலிதாவை அவர்கள் குறுகிய வட்டத்திற்குள் வைக்க நினைத்தார்கள். நாங்கள் பெரிய வட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம் என்பதுதான் எங்களது கருத்து.

இந்துத்துவா என்றாலே, அவர்கள் மதரீதியாக மட்டும் தான் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் இந்துத்துவா என்பது வாழ்க்கை முறை என்று. இந்திய கலாச்சாரத்தில் பெரும்பான்மையானோர் பின்பற்றும் வாழ்க்கை முறை என்று சொல்கிறோம். இதை வைத்து ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்கிறோம். ஜெயலலிதா எவ்வளவு ஆன்மீக நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று சொன்ன திராவிட முன்னேற்றக் கழகத்தினர் எத்தனை பேர் ராகு காலத்தில் எமகண்ட நேரத்திலும் போய் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள் என்று சொல்லட்டும். 

நாங்கள்  என்றைக்கு வேட்பு மனு தாக்கல் செய்தோமோ அப்போது தான் அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். ஆன்மீக நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று சொல்கிறோம். ஆனால் நீங்கள் இதை எதிர்த்து விட்டு அதையே தான் நீங்களும் செய்கிறீர்கள் அவர்கள் சொல்வது எல்லாம் போலி மதசார்பின்மை தான். காவியை வெண்மை ஆக்கினார்கள். நாங்கள்  வெண்மையை காவி ஆக்கி இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்