76 ல் ஷாவால்தான் திராவிட மாடல் ஆட்சி கலைக்கப்பட்டது: டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!

Apr 19, 2025,04:28 PM IST

சென்னை:76 இல் ஷாவால்தான் இவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்கு ஒரு முறையும், தேசவிரோதத்திற்கு ஒரு முறையும், என இரண்டு முறை ஒரு ஆட்சி கலைக்கப்பட்டு இருக்கிறது  என்றால் அது திராவிட மாடல்  ஆட்சி தான் என டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.


டெல்லி ஆளுகைக்கு அப்பாற்பட்டது தமிழ்நாடு. இது ஒரு அவுட் ஆப் கண்ட்ரோல். ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் தமிழ்நாடு ஏற்காது. அமித்ஷா இல்ல. எத்தனை ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது என நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுத்திருந்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். 


இந்த நிலையில் இது குறித்து டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,


தமிழக மக்களின் அவுட் ஆப் கண்ட்ரோலாக ஸ்டாலின் இனி பத்து மாதத்தில் போகப் போகிறார் என்பதை மிகப் பதற்றத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார். எதற்கு இவ்வளவு பதற்றம். அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்து ஸ்டாலின் மிகுந்த பதட்டத்தோடு காணப்படுகிறார். நீங்கள் டெல்லிக்கு அடிபணிய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. டெல்லிக்கு அடிபணிய வில்லை என்றால் இலங்கையில் நம் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அடிபணிந்து தான் அதை நீங்கள் தடுக்காமல் இருந்தீர்கள். இன்று மாநில சுயாட்சி பற்றி பேசுகிறீர்கள். 16 ஆண்டுகள் 5 அமைச்சர்களுடன் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது டெல்லிக்கு அடிபணிந்து தான் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசாம இருந்தீர்கள். இன்று கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என சொல்கிறீர்கள். இவ்வளவு ஆண்டு காலம் ஏறக்குறைய 15, 16 ஆண்டு காலம் ஆட்சியில் மத்தியில் இருந்த போது டெல்லிக்கு அடிபணிந்து கொண்டு தானை ஒற்றை வார்த்தை பேசாமல் இருந்தீர்கள். ஆக நீங்கள் ஆட்சி செய்யும் போது டெல்லிக்கு அடிபணிந்து தான் இருந்தீர்கள். எதையும் கொண்டு வரவில்லை இன்று வீர வசனம் எல்லாம் பேசலாம். 




ஷா இல்ல எந்தா ஷாவும் ஒன்று செய்ய முடியாது என்று சொல்கிறார். நினைவுபடுத்துகிறேன் 76 இல் ஷாவால்தான் இவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்கு ஒரு முறையும், தேசவிரோதத்திற்கு ஒரு முறையும், ஆட்சி கலைக்கப்பட்டது. இரண்டு முறை ஒரு ஆட்சி கலைக்கப்பட்டு இருக்கிறது  என்றால் அது திராவிட மாடல்  ஆட்சி தான். அதனால் இதையெல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை விட, இன்னொன்று சொல்கிறார். நாங்கள் தொகுதி வரையறைக்கு ஒரு கேள்வி கேட்டோம். அதற்கு பதில் இல்லை என்று. மரியாதைக்குரிய அமித்ஷா அவர்கள் பதில் சொல்லிவிட்டார். உங்களுக்கு புரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. அதே மாதிரி இந்தி திணிப்பை பற்றி பதில் இல்லை என்று சொல்கிறார். பிரதான் அவர்கள் இந்தி திணிப்பு கிடையாது என்று சொல்லிவிட்டார். அதுவும் உங்களுக்கு புரியவில்லை என்றால் அவர்கள் என்ன செய்வார்கள். 


அதேபோல் புரிந்தும் புரியாத மாதிரியும் ,தெரிந்தும் தெரியாதது மாதிரியும், ஆக பதற்றத்தில் பதற்றமில்லாத மாதிரியும், இன்றைய முதலமைச்சர் அவர்கள் பதற்றத்தோடு இருக்கிறார்கள். பதட்டம் வேண்டாம் முதலமைச்சர் அவர்களே. பதினோரு மாதம் பொறுத்திருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அதற்குப் பின்பு தமிழக மக்களுக்கு என்னெல்லாம் கொண்டு வரவேண்டுமோ அதை எல்லாம் கொண்டு வருவோம். எப்ப பாத்தாலும் மோதல் போக்கு இருந்தால் எப்படி? 


நான் கேட்கிறேன் நிதியைப் பற்றி பேசுகிறீர்கள். ஏன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை. ஒரு மாநிலத்தின் நிதி கட்டமைப்பை முழுவதுமாக விவாதிப்பது நிதி ஆயோக். அதற்கு நான் போக மாட்டேன். அதே மாதிரி இலங்கையில் இன்று தமிழக மீனவர்களை பற்றி பேசுகிறீர்கள்‌. தமிழக மீனவ பிரச்சனையும் இலங்கை மண் இந்தியாவிற்கு எதிராக பயன்படாது என்பதை இலங்கை அதிபரிடம் இருந்து உறுதிப்பாட்டை வாங்கிவிட்டு வந்த மரியாதைக்குரிய பிரதமர் அவர்களை ஏன் வரவேற்கவில்லை. 


எனக்கு எல்லா விஷயங்களிலும் அண்ணன் ஸ்டாலினுடைய நடவடிக்கைகளை பார்த்தால் நேரடியாக கே சி ஆர் இன் நடவடிக்கையை பார்த்தது போல் இருக்கிறது. நினைவலைகள் சுற்றி சுற்றி வருகிறது. இப்படித்தான் மத்திய அரசை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இன்று விஸ்வகர்மா திட்டத்தை துவங்குகிறார்கள். ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட பிறகு கைவினை கலைஞர்களுடைய சிந்தனையே உங்களுக்கு வரவில்லை. மரியாதைக்குரிய மோடி அவர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வந்த உடனேயே அவசர அவசரமாக கைவினை கலைஞர்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வருகிறீர்கள். 


அதனால்தான் இன்று ட்விட்டரில் பதிவு செய்தேன். கலைஞர் கைவினை திட்டத்திற்கு வழிவகுத்த பிரதமர் அவர்களுக்கு நன்றி என்று.ஏனென்றால் பிரதமர் அவர்கள் தான் முதலமைச்சர் அவர்களை கைவினை கலைஞர்களைப் பற்றி சிந்திக்கவாவது தூண்டியிருக்கிறார். அதனால் முதலமைச்சர் பதற்றம் வேண்டாம். அமைதியாக இருங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் கூட்டணிக்குள் உள்ள குழப்பங்களை முதலில் பாருங்கள். பொருந்தாத சந்தர்ப்பவாத கூட்டணியா..? நான் சொல்கிறேன் இந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி. திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று அமைத்த என்ற சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி. பலமான கூட்டணி. இன்னும் பல பேர் அதில் சேர்வார்கள். அதனால் பலமான கூட்டணியை கொண்டு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலை சந்திக்கப் போகிறோம். அதனால் பதற்றம் வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்