அது பாசிச ஆட்சி அல்ல.. பாசக்கார ஆட்சி.. பதற்றத்தின் முகட்டில் இந்தியா கூட்டணி.. தமிழிசை பதிலடி!

Jun 01, 2024,01:32 PM IST

சென்னை: பாசிச பாஜக ஆட்சி வீழட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்திருந்த அறிக்கைக்கு தென் சென்னை பாஜக வேட்பாளரும் முன்னாள் தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது பாசிச ஆட்சி அல்ல, பத்தாண்டு கால பாசக்கார ஆட்சி என்று அவர் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:




பாரதிய ஜனதா கட்சியின் பத்தாண்டு கால பாசக்கார ஆட்சியை வீழ்த்தி இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட கூட்டணி இந்தி கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இன்று பொறுப்பற்ற கூட்டணியாக மாறி, மக்களின் எதிர்ப்பை பெற்று வெற்றி கிட்டாது என்ற பதற்றத்தின் முகட்டில் நிற்கிறார்கள்.


பல்லாண்டுகாலமாக தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இயங்கிக் கொண்டிருந்த காங்கிரசுக்கு எதிராக ஜனநாயகத்தின் சாமானிய மக்களின் கட்சியாக உருவெடுத்த பாஜக இன்று அசுர பலம் பெற்று அசராமல் மக்களுக்கு பணியாற்றும் பிரதமரைக் கொண்டு அதிக பலம் கொண்ட அணியாக தேர்தல் களத்தில் வலம் வருகிறது. பலம் பெற்றிருக்கிறது.


தங்களது இடைவிடாத அயராத உழைப்பால் மாண்புமிகு பாரதப்பிரதமரும், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும் இந்தி கூட்டணி உருவாக்கிய போலி பிம்பத்தை உடைத்தெறிந்திருக்கிறார்கள்.....  பாஜக கூட்டணியின் வெற்றி செய்தி எழுதப்பட்டுவிட்டது.... அதிகாரப்பூர்வமாக நமக்கு வெற்றி கொண்டாட்டங்களுக்கு இன்றும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிக விழிப்புணர்வுடன் பாஜக கூட்டணி கட்சியினர் இருக்க வேண்டும் ஏனென்றால் மக்களால் ஏற்றம் பெற்ற நாம்.... மக்களை ஏமாற்றியே அரசியல் செய்யும் கூட்டத்தோடு மோதுகிறோம்.


பாசிச பாஜக ஆட்சி வீழட்டும், விழிப்புணர்வுடன் இருங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்


ஜூன்-4 இந்தியாவின் விடியல் என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அங்கம் வகிக்கும் இந்தி கூட்டணியின் முடிவுக்கு ஆரம்பமாகவும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 10 ஆண்டுகால நிறைவான, நிலையான ஆட்சிக்கு பதினொன்றாம் ஆண்டு வெற்றி தொடக்கமாக அமையும். 


இந்த இந்தி கூட்டணி வெற்றி பெறாத வெற்று கூட்டணி என்பதை அதன் தலைவர்களை உணர்ந்து விட்டார்கள்.... பிரதமரை ஒரே நாளில் தேர்ந்தெடுப்போம்... என்று முடியாத கதையை பேசிக் கொண்டிருப்பவர்கள்....  ஒரே நாள் கூட்டத்தில் கூட  கூட முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.... ஏன் தமிழகத்தில் இருந்தும் முதல்வர் கலந்துகொள்ள பொருள் ஒன்றும் இல்லை என்று பொருளாளரைத்தான் அனுப்பும் நிலை.... இதுவே இந்தி கூட்டணி.... வெல வெலக்கும் கூட்டணி இந்தி கூட்டணி என்றும்.... பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் உணர்த்துகிறது.


விடியல் என்று கூறியவர்கள் இன்று தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டு ஒப்புக்கு நடக்கும் கூட்டம் தான் டெல்லியில்..... ஒப்பில்லாத பாரதப்பிரதமர் மோடி அவர்களை போன்று ஒப்பானவர் யாருமில்லை என்பதை இந்திய அரசியல் மீண்டும் வலியுறுத்துகிறது.... இந்தி கூட்டணி வலுவிழந்து போய்க்கொண்டிருக்கிறது.... மறுபடியும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பாரத தேசம் மேலும் வலுவடையப் போகிறது என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ரகசியமாக நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்...வாழ்த்து மழையில் நனைந்த தம்பதிகள்..!

news

கூட்டணி தொடருமா?...முதல்வருடன் பேசியது என்ன?...திருமாவளவன் அளித்த பளிச் பதில்

news

மறுபடியும் வந்துட்டோம்...புதிய பட அறிவிப்பை வெளியிட்டார் லெஜண்ட் சரவணன்

news

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு...கைதானவர் சிறையில் தற்கொலை

news

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்..!

news

கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டில்லியின் அடுத்த முதல்வர் யார்?

news

மதுவிலக்கால் கூட்டணியில் பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்...திருமாவளவன் அதிரடி

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம்... சவரன் ரூ.55,000ஐ தாண்டியது

news

அக்டோபர் 3வது வாரத்தில் விஜய் கட்சி மாநாடு? அனுமதி கேட்டு மீண்டும் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்