சென்னை: தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தனது பெயரை பேசாமல் நிரந்தரமாக "அக்கா" என்றே மாற்றி வைத்து விடலாம்.. அந்த அளவுக்கு தொகுதியில் அவரது பெயர் அக்கா என்ற ரீச் ஆகி விட்டது. போகும் இடமெல்லாம் அவரும் தனது பாசத்தை அள்ளித் தெளித்துச் செல்கிறார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன். தினசரி வாகனப் பிரச்சாரத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் டாக்டர் தமிழிசை, தன்னை அக்கா என்றே பிரகடனப்படுத்தி பிரச்சாரத்தில் பேசுகிறார். அவரது பிரச்சாரம் பலரையும் கவர்ந்துள்ளது. இயல்பாக பேசுகிறார், ஜாலியாக பேசுகிறார், தனது வாக்குறுதிகளையும் அழகாக எடுத்து வைக்கிறார்.
போகும் இடமெல்லாம் சாதாரண மக்களைக் கவரும் வகையில் பேசுகிறார். வழியில் எங்காவது குப்பைகள் கிடந்தால் உடனே வாகனத்தை நிறுத்தி, இப்படி குப்பைகளை கூட அகற்றாத நிர்வாகம்தான் நம்மிடம் உள்ளது. இதைப் பார்த்தால் எனக்கு குப்பையாகத் தெரியவில்லை. டெங்குவாகத் தோன்றுகிறது, காலராவாகத் தோன்றுகிறது என்று டைமிங்காக அடிக்கிறார்.
அதேபோல வழியில் ஏதாவது டீக்கடை, வடை கடை தென்பட்டாலும் விடுவதில்லை. அங்கும் புகுந்து விடுகிறார். ஜாலியாக பேசியபடி டீ சாப்பிட்டும், வடை சாப்பிட்டும் மக்களிடையே எளிமையாக பேசுகிறார். இந்த நிலையில் தி.நகர் நல்லாங்குப்பம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அவர் ஒரு வீட்டைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னார். என்னடா என்று பார்த்தால் அந்த வீட்டில் அதிரசம் சுட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழிசையைப் பார்த்ததும் சூடாக நாலு அதிரசத்தை எடுத்து காகிதத்தில் வைத்து அன்போடு கொடுத்தார்கள். அதை பாசத்தோடு பெற்றுக் கொண்ட அதிரசம், இந்தப் பக்கம் கிராஸ் பண்ணும்போது அதிரசம் வாசம் மூக்கைத் துளைச்சுருச்சு.. அதான் நிறுத்தச் சொன்னேன் என்று புன்னகையுடன் கூறியபடி ஒரு அதிரசத்தை ஆன் தி ஸ்பாட்டிலேயே சுவைத்து சூப்பரா இருக்கு என்று கண்களாலேயே அந்த அம்மாவிடம் சந்தோஷமாக தெரிவித்து விட்டு விடை பெற்றார்.
பிரச்சாரக் களத்தில் களக்கும் டாக்டர் தமிழிசை, தென் சென்னையையும் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடர்கின்றனர் பாஜகவினர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}