கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

Apr 03, 2025,06:11 PM IST

சென்னை: சென்னையில் கார்ல் மார்க்ஸ்  திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டசபையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், உலக மாமேதை கார்ல் மார்க்ஸை பெருமைப்படுத்திட திமுக அரசு விரும்புகிறது. உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற பிரகடனத்தை வடிவைமத்தவர் கார்ல் மார்க்ஸ். வரலாற்றை மாற்றியமைத்த சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ். 


அவரது நினைவு நாளான மார்ச் 14ம் நாள் தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம். இந்தியா ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடையும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம் என எழுதியவர் மார்க்ஸ். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மார்க்ஸின் சிலை நிறுவப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 


இரண்டாவது அறிவிப்பாக அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தலைவரும் உறங்கா புலி எனப் போற்றப்பட்டவருமான மூக்கையா தேவருக்கு நாளை 103வது பிறந்த நாள். மதுரை உசிலம்பட்டியில் பிறந்த அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நம்பிக்கை பெற்று ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். உசிலம்பட்டியில் பலமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் நாயகனாக திகழ்ந்தவர். அவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,  




பொதுவுடைமை புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.  ஜெர்மனியில் பிறந்து உலகம் முழுவதும் வாழும் பாட்டாளிகளின் தோழராக உருவெடுத்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு ஆகும்.


இந்தக் கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள  திருவுருவச் சிலையை  2007-ஆம் ஆண்டு  செப்டம்பர் 17-ஆம் நாள்  நடைபெற்ற  நிகழ்ச்சியில்  எனது முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.இராசா அவர்கள் திறந்து வைத்தார் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்