பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

Apr 10, 2025,04:38 PM IST

சென்னை: பாமக நிறுவனரான நானே இனி கட்சித் தலைவர் பதவியையும் வகிக்கப் போகிறேன். கட்சியன் செயல் தலைவராக டாக்டர் அன்புமணி செயல்படுவார். கெளரவத் தலைவராக ஜி.கே.மணி தொடர்கிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாமக தலைவராக கடந்த 2022ம் ஆண்டு வரை ஜி.கே.மணி செயல்பட்டு வந்தார். டாக்டர் ராமதாஸும், ஜி.கே.மணியும் இணைந்து பல கூட்டணிகளை உருவாக்கியுள்ளனர். சிறப்பாகவும் செயல்பட்டுள்ளனர். இந்த நிலையில் 2022ம் ஆண்டு பாமக தலைவராக, அதுவரை இளைஞர் அணித் தலைவராக செயல்பட்டு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். கெளரவத் தலைவராக ஜி.கே.மணி மாற்றப்பட்டார்.


இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின்போது இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் ஆவார். இதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் இடையே கடும் வாதமும் மூண்டது. அப்போது இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க விரும்பாதவர்கள், யாராக இருந்தாலும் வெளியேறி விடுங்கள் என்று கோபமாக கூறினார்.




இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பனையூரிலிருந்து தான் செயல்படவுள்ளதாக டாக்டர் அன்புமணி அறிவித்தார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. இதன் விளைவாக தைலாபுரம் தோட்டத்திற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வந்து தனது தந்தையைச் சந்தித்தார். அப்போதும் கூட இறுக்கமான முகத்துடன்தான் டாக்டர் ராமதாஸ் காணப்பட்டார்.


இந்த சந்திப்புக்குப் பிறகு இருவருமே அமைதியாக செயல்பட்டு வந்தனர். ஆனால் இன்று திடீரென டாக்டர் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார் டாக்டர் ராமதாஸ். அவரது பொறுப்பை தானே ஏற்பதாகவும், கட்சியையும் இளைஞர்களையும் தானே வழி நடத்தப் போவதாகவும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


ஏன் இந்த திடீர் மாற்றம் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்குப் பல காரணங்கள் உண்டு. நான் சிறுக சிறுக தெரிவிப்பேன் என்று பதிலளித்தார் டாக்டர் ராமதாஸ்.


பிரச்சினைக்கு என்ன காரணம்?




டாக்டர் ராமதாஸ், அன்புமணியின் தலைமை மீது கடும் அதிருப்தியுடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அன்புமணியின் தலைமையில் பாமக தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருவதாக அவர் விரக்தி அடைந்துள்ளதாக சொல்கிறார்கள். பாமகவின் உண்மையான பலம், வன்னிய சமுதாயத்தினர்தான். அந்த முக்கியமான நோக்கத்திலிருந்து டாக்டர் அன்புமணி விலகிச் செல்வதாக டாக்டர் ராமதாஸ் கருதுகிறாராம்.


தொடர் சரிவுகள், வாக்கு வங்கியில் பெரும் தளர்ச்சி, செல்வாக்கு குறைந்து போனது உள்ளிட்ட பல காரணங்களால் டாக்டர் அன்புமணி மீது அதிருப்தி அடைந்ததன் காரணமாகவே, முதலில் தனது பேரனுக்குக் கட்சிப் பொறுப்பை அளித்தார். ஆனால் அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தற்போது அவரையே பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.


இதுதவிர ராமதாஸைப் பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதைய அவர் விரும்பினார். பாஜகவை அவர் விரும்பவில்லை. அது டாக்டர் அன்புமணியின் விருப்பமாகும். பாஜகவுடன் சேர்ந்தால் அது நமக்கு பலவீனமே. அதிமுக கூட்டணிதான் நமக்கு லாபம் தரும் என்று ராமதாஸ் கூறி வந்துள்ளார். ஆனால் அதைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எதிர்த்து வந்ததால்தான் தற்போது வேறு வழியில்லாமல் அன்புமணி மீதான நடவடிக்கையை அறிவித்துள்ளார்.


வரும் நாட்களில் பாமகவுக்குள் மிகப் பெரிய பிரளயம் வெடிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

news

நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி

news

பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்

news

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

news

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!

news

இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!

news

சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்