சென்னை: பொதுக்குழுவில் நடைபெற்றது உட்கட்சிப் பிரச்சனை. அது சரியாகி விட்டது. முகுந்தனுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டு விட்டது. அவர் நீடிக்கிறாரா என்ற கேள்வியே இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது, முகுந்தன் என்பவரை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பதாக அறிவித்தார்.
அப்போது டாக்டர் ராமதாஸுக்கு அருகே அமர்ந்திருந்த அன்புணி ராமதாஸ் குறுக்கிட்டு மைக்கை கையில் எடுத்து, கட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன முகுந்தனுக்கு பதவியா? அவருக்கு எல்லாம் என்ன அனுபவம் இருக்கிறது என மேடையிலேயே பகிரங்கமாக எதிர்த்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத டாக்டர் ராமதாஸ் ஆவேசமாகி, இது நான் உருவாக்கிய கட்சி. இங்கு நான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும். நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும். நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியை விட்ட போங்க என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையிலேயே நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று கூறி மைக்கை வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி கடந்த 29ம் தேதி நேரில் சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி பேசுகையில், பாமக ஒரு ஜனநாயக அமைப்பு. நேற்று நடந்தது பாமகவின் உட்கட்சிப் பிரச்சினை. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜமானது. எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான் நேற்றும் நடந்தது என்றார் அன்புமணி.இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டதற்கு, அது எங்களது உட்கட்சிப் பிரச்சினை. அதுகுறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று மட்டும் கூறி விட்டுக் கிளம்பினார் அன்புமணி ராமதாஸ்.
அதன்பின்னர், தாத்தா டாக்டர் ராமதாஸை, தனது குடும்பத்தோடு போய் பார்த்த முகுந்தன், தாத்தா எனக்கு இப்போது எந்தப் பொறுப்பும் வேண்டாம். மாமாவுக்கு (டாக்டர் அன்புமணி) ஆட்சேபனை இருப்பதால் நான் எந்தப் பொறுப்பையும் வகிக்க விரும்பவில்லை. ஊடகப் பிரிவு பொறுப்பும் கூட வேண்டாம். வெறும் தொண்டனாக இருந்து கொள்கிறேன். சிறிது காலத்திற்குப் பிறகு நீங்கள் ஏதாவது பொறுப்பு கொடுத்தால் அதை ஏற்க நான் தயார். இப்போது எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாமக பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கிவிட்டதாகவும் தற்போது அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுக்குழுவில் ஏற்பட்ட பிரச்சினை சரியாகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினை சரியாகி விட்டது என்றால், முகுந்தன் நியமனத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஏற்றுக் கொண்டு விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இரு தரப்பும் இதுவரை விளக்கமாக தெரிவிக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை... ஜனவரி 17ம் தேதி லீவு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஃபெங்கல் புயல் தீவிர பேரிடர்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: 4 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு
அஜித் மகள் பிறந்தநாள்...க்யூட்டான குடும்ப போட்டோக்களை பகிர்ந்த ஷாலினி
யார் அந்த சார்?...கனிமொழி சொன்ன பதில்...இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே
சபரிமலையில் குவியும் காணிக்கை...41 நாளில் வருமானம் எவ்வளவு தெரியுமா?
மதுரை திருமங்கலத்தில் 1000 கிலோ கறி, 2500 கிலோ அரிசி..ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து
ஜல்லிக்கட்டுக்கு போன இடத்தில் மல்லுக்கட்டு...புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு
பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா?....சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் துவங்கிடுச்சு
{{comments.comment}}