சென்னை: புதுச்சேரி பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு தனது தந்தையும், பாம நிறுவனருமான டாக்டர் ராமதாஸை, இன்று தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று சந்தித்துப் பேசினார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி எடுத்த தீவிர முயற்சிகளைத் தொடர்ந்து, தனது தந்தையை சந்திக்க சம்மதம் தெரிவித்தாராம் டாக்டர் அன்புமணி.
புதுச்சேரியில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் வருகிற 2025ம் ஆண்டு கட்சியை எப்படி வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வது, என்ன மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில், டாக்டர் ராமதாஸுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. இதனால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்தனர். தேசிய அளவில் இது பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டது.
டாக்டர் ராமதாஸ் தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை கட்சியின் இளைஞர் சங்க தலைவராக நியமிப்பதாக அறிவித்ததே பிரச்சினைக்குக் காரணம். முகுந்தன் பதவிக்கு வருவதை டாக்டர் அன்புமணி விரும்பவில்லை என்று தெரிகிறது. இதற்குப் பல காரணங்கள் கூறுகிறார்கள். கட்சியில் அனுபவம் வாய்ந்த பலர் உள்ளனர். அவர்களுக்கு பதவியைத் தாருங்கள் என்று பகிரங்கமாகவே வலியுறுத்தினார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். ஆனால் இது நான் ஆரம்பித்த கட்சி, நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார் டாக்டர் ராமதாஸ்.
இந்த வாக்குவாதத்தின்போது மேடையில் மைக்கைப் பிடித்து எழுந்து நின்ற டாக்டர் அன்புமணி சென்னை பனையூரில் தான் ஒரு அலுவலகம் தொடங்கி இருப்பதாகவும், அங்கு வந்து தன்னை சந்திக்கலாம் என்றும் அறிவித்து செல்போன் எண்ணையும் கூறினார். இது மேலும் பரபரப்பைக் கூட்டியது. இப்படி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனத்தாங்கல், கோபம், ஆவேசம் கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியது.
ஊரே பார்க்கும் வகையில் நடந்து விட்டதே என்று கட்சி நிர்வாகிகளும் வேதனைக்குள்ளானார்கள். இதையடுத்து தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று இரவு சென்ற பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் சென்னைக்குப் போய் விட்ட டாக்டர் அன்புமணியையும் தொடர்பு கொண்டு பேசினார்.
தைலாபுரம் தோட்டத்திற்கு வருமாறும், ராமதாஸை சந்தித்துப் பேசுமாறும், இருவரும் மனம் விட்டுப் பேசினால் பிரச்சினைகள் சரியாகும். இதை வளர்க்க வேண்டாம். சிரமப்பட்டு உருவாக்கிய இயக்கத்தை மற்றவர்கள் கண்ணில் கேலிப் பொருளாக்கி விட யாரும் காரணமாகி விடக் கூடாது என்றும் ஜி.கே.மணி எடுத்துக் கூறியதாக தெரிகிறது. மேலும் இருவரும் பிளவுபட்டு நின்றால் கட்சி பலவீனமாகி விடும். அது 2026 சட்டசபைத் தேர்தலுக்கு கட்சிக்கு பாதகமாகி விடும் என்றும் எடுத்துக் கூறினார்.
இதையடுத்து இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து ராமதாஸை சந்திப்பதாக உறுதி அளித்தார்டாக்டர் அன்புமணி. அதன்படி காலையில் சென்னையிலிருந்து கிளம்பிய அன்புமணி ராாமதாஸ் பிற்பகல் வாக்கில் தைலாபுரம் வந்து சேர்ந்தார். அவரது வருகையைத் தொடர்ந்து வீட்டுக்கு வெளியே கட்சியினர் பெருமளவில் குவிந்திருந்தனர். தற்போது அன்புமணி தனது தந்தையைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை டாக்டர் ராமதாஸம், அன்புமணியும் சேர்ந்து சந்திப்பார்களா என்று தெரியவில்லை. இருப்பினும் சந்திப்புக்குப் பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}