விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
புதுச்சேரியில் நேற்று பாமக சிறப்புப் பொதுக்குழுவில் தனது தந்தையுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் மற்றும் விவாதத்திற்குப் பின்னர் இன்று சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து டாக்டர் ராமதாஸைச் சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, மூத்த தலைவர்கள் வழக்கறிஞர் கே.பாலு, அருள், திலகபாமா, வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் இருந்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். அப்போது அவர் கூறியதாவது:
மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுப் பணிகள், கட்சிப் பணிகள் குறித்து டாக்டர் ராமதாஸுடன் பேசினோம். என்னென்ன போராாட்டங்கள் குறித்துப் பேசினோம். வரப் போகும் ஆண்டு எங்களுக்கு முக்கியானது. மக்கள் விரோத ஆட்சியை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தோம் என்றார் டாக்டர் அன்புமணி.
தொடர்ந்து செய்தியாளர்கள், நேற்று நடந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, பாமக ஒரு ஜனநாயக அமைப்பு. நேற்று நடந்தது பாமகவின் உட்கட்சிப் பிரச்சினை. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜமானது. எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான் நேற்றும் நடந்தது என்றார் அன்புமணி.
இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டதற்கு, அது எங்களது உட்கட்சிப் பிரச்சினை. அதுகுறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று மட்டும் கூறி விட்டுக் கிளம்பினார் அன்புமணி ராமதாஸ்.
டாக்டர் ராமதாஸுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்தும் பெரிதாக விளக்கம் தரவில்லை டாக்டர் அன்புமணி. அவரது பேட்டியைப் பார்க்கும்போது டாக்டர் ராமதாஸுடன் இப்போதைக்கு சமரசம் ஏற்பட்டுள்ளதாக உணர முடிகிறது. அதேசமயம், பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டு விட்டதா என்பது தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கெளதம் கம்பீர், ரோஹித் சர்மாவை நேரில் அழைத்து விசாரிக்க பிசிசிஐ முடிவு.. தொடர் தோல்விகளால் கோபம்!
7ஜி ரெயின்போ காலனியை கையில் எடுத்த செல்வராகவன்.. terrible comboவுடன்.. செம அப்டேட்!
2025ம் ஆண்டின் முதல் அதிரடி.. தடாலடியாக தனது பெயரை மாற்றினார் எலான் மஸ்க்!
Happy New Year 2025.. பிறந்தது 2025.. இந்தியா முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன்.. தெறிக்க விட்ட மக்கள்
மார்கழி 18 - திருவெம்பாவை 18 - அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
மார்கழி 18 - ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 18 - உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
2025 வருக வருக.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
திருவள்ளுவரைக் கொண்டாடிக் கொண்டே இருப்போம்.. அது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
Happy Pongal மக்களே.. ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்!
{{comments.comment}}