திருவனந்தபுரம்: அதீதமாக வரதட்சணை கேட்டு அதைக் கொடுக்க தவறியதால் கல்யாணத்தை நிறுத்தி விட்டனர் மாப்பிள்ளை வீட்டார். இதனால் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த பெண் டாக்டர் தற்கொலை மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட செயல் கேரளாவை அதிர வைத்துள்ளது.
கேரளாவில் மேலும் ஒரு இளம் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வந்தவர் சஹானா. அதே மருத்துவ கல்லூரியில் படிக்கும் ருவாயிஸ்சை காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலுக்கும், திருமணத்திற்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இருப்பினும் பெண் வீட்டாரிடம் பெருமளவு வரதட்சணை கேட்டுள்ளனர். எவ்வளவு தெரியுமா?. 150 சவரன் தங்க நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் பெண் வீட்டாரால் இதை கொடுக்க முடியவில்லை. வரதட்சணை கொடுக்காததால் திருமணத்தை நிறுத்தி விட்டனர் மாப்பிள்ளை வீட்டார்.
இது சஹானாவை அதிர்ச்சி அடைய வைத்து விட்டது. காதலை விட கரன்சிக்கே மாப்பிள்ளை வீடு முக்கியத்துவம் கொடுத்தது அவருக்கு பெரும் அவமானமாகப் போய் விட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த சஹானா, தனது ஹாஸ்டல் அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து மணமகன் ருவாயிஸ்சை வரதட்சணை வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தக் காலத்திலும் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுவதும், அதில் ஒரு உயிர் பரிதாபமாக பறிபோயுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}