- மஞ்சுளா தேவி
தேவகோட்டை: லஞ்சம் என்பது அடுத்தவரிடம் கைநீட்டி பிச்சை எடுப்பதற்கு சமம். பிச்சை எடுத்தாவது படி ஆனால் படித்து பதவி வந்தவுடன் பிச்சை எடுக்காதே என்று டிஎஸ்பி ஜான் பிரிட்டோ பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்விழா சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஊழல் மற்றும் விழிப்புணர்வு கண்காணிப்பு துறை டிஎஸ்பி ஜான் பிரிட்டோ கலந்து கொண்டு லஞ்சம் கொடுப்பதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அதிக ஆசைப்படக்கூடாது. எங்களுக்கு புகார் வந்தால் லஞ்சம் கேட்பது உண்மை என்று தெரிந்தால் விசாரித்து நேரடியாக உண்மையை நிரூபிப்போம். லஞ்சம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம் .நேர்மையை நிலை நாட்டுங்கள். ஆசை அதிகமாகவதே லஞ்சத்துக்கு காரணமாகும். நமது பயம் ஒழிந்தால் லஞ்சம் ஒழியும். லஞ்சம் வாங்குபவர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடும் என்றார் அவர்.
மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் லஞ்சம் என்றால் என்ன ?ஊழல் என்றால் என்ன? அது எங்கெல்லாம் அதிகம் உள்ளது போன்ற தகவல்களை விளக்கினார் டிஎஸ்பி ஜான் பிரிட்டோ. புதிய சட்டத்தின்படி லஞ்சம் வாங்கி பிடிப்பட்டால் நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை தண்டனை உண்டு, லஞ்சம் ஊழல் தொடர்பாக தகவல் தெரிந்தால் 9498190140 மற்றும் 04575-240222 என்ற எண்ணில் தன்னை தொடர்பு கொள்ளலாம். லஞ்சம் என்பது அடுத்தவரிடம் கைநீட்டி பிச்சை எடுப்பதற்கு சமம்.பிச்சை எடுத்தாவது படி ஆனால் படித்து பதவி வந்தவுடன் பிச்சை எடுக்காதே என்றும் கூறினார்.
இவ்விழா நிறைவு பெற்ற பின்னர் விஜிலன்ஸ் பிரிவின் முதுநிலை காவலர்கள் தனபாலன், கண்ணன் ஆகியோர் விழிப்புணர்வு உறுதி கூற மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .சிறப்பாக கேள்வி கேட்ட மாணவர்களுக்கும், நிகழ்வில் லஞ்ச விழிப்புணர்வு தொடர்பாக கூடிய தகவல்களை உள்வாங்கி பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஊழல் என்பது ஒரு தனிப்பட்ட தனி மனிதனின் செயல் மட்டுமல்லாமல் ஒரு தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கும். பணம் படைத்தவர்கள் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் திறமை மிக்கவர்களின் வாய்ப்பை ஊழலால் பறிக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் அதிகாரிகளே இந்த தவறை செய்வது ஏழை எளிய பாமர மக்களை பாதிக்கின்றது. இதனால் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டியவை தடுக்கப்படுகிறது.
இந்த தவறு தொடர்ந்து கொண்டே போனால் நாட்டின் பொருளாதாரம் சரியும் நிலைக்கு தள்ளப்படும். ஊழல் தடுப்பு சட்டம் இருந்தும் இதுபோன்ற தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இனிவரும் தலைமுறையாவது மாணவ- மாணவியர்கள் ஒவ்வொருவரும் ஜனநாயகத்தின் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}