மிலன்: பாடிகார்ட் அப்படின்னு மலையாளத்தில் ஒரு படம் வந்தது.. அது அப்படியே தமிழில் காவலன், இந்தியில் பாடிகார்ட் என்று ஒவ்வொரு மொழியிலும் ஹிட்டடித்தது. இந்தப் படத்திற்குப் பிறகு பாடிகார்டுகள் குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. இந்த நிலையில், கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியின் பாடிகார்ட் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.. காரணம், அவரது அதிரடி ஆக்ஷன் மற்றும் ரியாக்ஷன்கள்.
லியோனல் மெஸ்ஸி உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர். உலகம் முழுவதும் அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். இவர் எங்கு போனாலும் ரசிகர்கள் கூட்டம் இவரை மொய்த்து விடும். கை குலுக்கவும், செல்பி எடுக்கவும், கட்டிப்பிடிக்கவும் ரசிகர்கள் துடிப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் சிக்கிக் கொள்ளாமல் தப்புவதற்காகவே தனக்கென பிரத்யேகமாக ஒரு பாடிகார்டு வைத்துள்ளார் மெஸ்ஸி.
அந்த பாடிகார்டுதான் இப்போது பிரபலமாகி வருகிறார். அவரது பெயர் யாசின் சூக்கோ. சூப்பராக செயல்படுகிறார் சூக்கோ. மெஸ்ஸியின் மீது நிழல் கூட படியாமல் படு கேர்ஃபுல்லாக தனது வேலையைக் கவனித்து வருகிறார் சூக்கோ. இதனால்தான் அவர் பிரபலமாகியுள்ளார். ஒரு பாடிகார்டு எப்படி செயல்பட வேண்டுமோ, புத்திசாலித்தனமாக இருக்க வேண்டுமோ, க்விக்காக ரியாக்ட் செய்ய வேண்டுமோ அதை சூக்கோ சூப்பராக செய்கிறார் என்று அவருக்குப்
சும்மா சொல்லக் கூடாது. யாசின் படு வேகமாக செயல்படுகிறார். மெஸ்ஸியின் பின்னால் நிழல் போலவே நிற்கிறார். யாராவது அவரிடம் நெருங்கினால் மின்னல் வேகத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். மெஸ்ஸியுடன் யாரேனும் செல்பி எடுத்தால், தோள் மீது கை போட வந்தால் டக்கென போய் அதை எடுத்து விடுகிறார். மெஸ்ஸியை யாரும் தொடாமல் பார்த்துக் கொள்வதில் படு கவனமாக இருக்கிறார். மைதானத்தில் எங்கிருந்து யார் ஓடி வந்து மெஸ்ஸியைக் கட்டிபிடிக்க முயன்றாலும் அவர்களை விட படு வேகமாக ஓடி வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தி தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்.
இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அங்கு ராணுவத்தில் பணியாற்றியவராம். ஈராக், ஆப்கானிஸ்தான் போரின்போது கடற்படையில் பணியாற்றிய முன்னாள் கடற்படை வீரர். இன்டர் மியாமி கிளப் தலைவர் டேவிட் பெக்காம்தான், இவரை மெஸ்ஸிக்குப் பரிந்துரைத்தாராம். முன்னாள் கடற்படை வீரர் என்பதால் எல்லா வித்தைகளையும் கற்று வைத்திருக்கிறார் யாசின் சூக்கோ.
விளையாட்டுப் போட்டிகளின்போது மட்டுமல்லாமல், மெஸ்ஸி எங்கு போனாலும் கூடவே சூக்கோவும் செல்கிறார். மெஸ்ஸி குடும்பத்திற்கும் இவர்தான் பாடிகார்டு. பாடிகார்டு வேலை பார்த்தாலும் கூட சைடில் தனது சோசியல் மீடியா பக்கங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார் சூக்கோ. இவருக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஏழே முக்கால் லட்சம் பாலோயர்கள் உள்ளனர். பாக்ஸிங், தற்காப்புக் கலை, உடற்பயிற்சி உள்ளிட்ட வீடியோக்களை அதில் போடுகிறார்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}