நான் மட்டும் தோத்தேன்னா.. ரத்த ஆறு ஓடும்.. பார்த்துக்கங்க.. டொனால்ட் டிரம்ப் முரட்டுப் பேச்சு!

Mar 17, 2024,06:15 PM IST

ஒஹையோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் தோற்றால் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பது அமெரிக்கர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


அமெரிக்க அதிபர்களிலேயே மிகவும் மோசமானவர் என்ற பெயரைப் பெற்றவர் டிரம்ப். இவரை ஆதரித்தவர்களை விட வெறுத்தவர்களே அதிகம். கடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடனை எதிர்த்து இவர் போட்டியிட்டார். ஆனால் பிடன் வெற்றி பெற்றதால் ஆத்திரமடைந்த இவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு நாட்டையே அதிர வைத்தனர்.




கொரோனா காலத்திலும் கூட இவர் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் பல அப்பாவிகளின் உயிர்கள் பறி போயின. இந்த நிலையில் தற்போது மீண்டும்  டிரம்ப் அதிபர் தேர்தலில் நிற்கிறார். ஆனால் அவர் இன்னும் மாறவில்லை என்பது அவரது பிரச்சார பேச்சிலிருந்து தெரிய வந்துள்ளது.


ஓஹையோ மாகாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது ஜோ பிடனை கடுமையாக எச்சரித்தார். தரக்குறைவாக பேசினார். அதை விட முக்கியமாக தான் தோற்றால் அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்தார். மேலும் அமெரிக்காவில் ஜனநாயகம் முடிவுக்கு வரும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.


ஓஹையோ கூட்டத்தில் பேசியபோது, சீன அதிபர் ஜி ஜின்பிங், மெக்சிகோவில் மிகப் பெரிய கார் நிறுவனங்களைத் திறந்து வருகிறார். இந்தக் கார் நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கு வேலை தரப் போவதில்லை. ஆனால் கார்களை மட்டும் இங்கு விற்பார்கள். இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. 


நான் எச்சரிக்கிறேன்.. நான் இந்தத் தேர்தலில் தோற்றால் நாட்டில் ரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்க முடியாது.  இந்தத் தேர்தலில் நாம் வெல்லாவிட்டால் மீண்டும் இந்த நாட்டில் தேர்தல் வராது. ஜனநாயகம் முடிந்து போய் விடும் என்று கூறினார் டிரம்ப்.


டிரம்ப்பின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் நிதானம் இழந்து விட்டார் என்று அதிபர் ஜோ பிடனின் டீம் கூறியுள்ளது. இவர்கள் நாட்டின் நாடாளுமன்றத்தையே தாக்கத் துணிந்தவர்கள் என்றும் ஜோ பிடன் டீம் குற்றம் சாட்டியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்