வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் இந்த பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீதோஷ்ண நிலை சரியில்லாமல் இருப்பதால் இந்த முறை உள்ளரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் ஜூனியர், டொனால்ட் டிரம்ப்புக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். 2வது முறையாக டிரம்ப் அதிபராகப் பதவியேற்றுள்ளார். துணை அதிபராக வான்ஸ் பதவியேற்றுக் கொண்டார்.
அதிபராகப் பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவுக்கு இன்றைய தினம் விடுதலை தினமாகும். அமெரிக்காவின் இறையாண்மையை மீட்டெடுக்கப் பாடுபடுவேன். இந்த நிமிடத்திலிருந்து அமெரிக்காவின் சரிவு முடிந்து விட்டது. பல்வேறு துரோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்திய தேர்தல் முடிவுகள் அமைந்தன. மக்களுக்கு அவர்கள் இழந்த நம்பிக்கை, வளம், ஜனநாயகம், விடுதலை ஆகியவற்றை திரும்பக் கொடுத்துள்ளேன் என்றார் டிரம்ப். டிரம்ப் இவ்வாறுப் பேசும்போது பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிபரான ஜோ பைடன் எந்தவிதமான சலனமும் இல்லாமல் புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்.
முன்னதாக தனது மனைவி மெலனியாவுடன் சர்ச்சில் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப் பின்னர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார். அவரை ஓய்வு பெறும் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னர் டிரம்ப் தம்பதிக்கு பைடன் தம்பதி தேநீர் விருந்தளித்துக் கெளரவித்தது. அதைத் தொடர்ந்து பைடன் தம்பதியும், டிரம்ப் தம்பதியும் கேபிடலுக்கு காரில் வந்தனர். அங்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். பல்வேறு நாட்டு தூதர்கள், ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க், அமேஜான் நிறுவனத்தின் ஜெப் பெஜாஸ், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட டெக் தலைவர்கள் ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி, ஜார்ஜ் புஷ் அவரது மனைவி லாரா, பராக் ஒபாமா ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெரியார் குறித்துக் கேட்ட வாக்காளர்.. ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி அளித்த பதில்!
சபாநாயகர் அப்பாவு சொன்ன ஞானசேகரன் இவர்தான்.. பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தரும் விளக்கம்!
இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில்.. பிப்ரவரி 5 பொது விடுமுறை அறிவிப்பு
திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி.. பட்டையைக் கிளப்ப வரும் இசைஞானி.. ரசிகர்களே ரெடியா?
அன்னா ஹசாரே போல.. உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்?.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு கேள்வி
நெகிழியின் கண்ணீர் (கவிதை)
Cooking Tips.. மட்டன் சிக்கன் குழம்புக்கு டஃப் கொடுக்கும் பட்டன் காளான் பட்டாணி குழம்பு!
சிவகங்கை மாவட்டத்தில்.. இன்றும் நாளையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு!
வாரிசு, கேம்சேஞ்சர் பட தயாரிப்பாளர்.. தில் ராஜு வீட்டில்.. வருமானவரித்துறை திடீர் சோதனை!
{{comments.comment}}