வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு, பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கம் சட்டத்தைத் திருத்தப் போவதாக புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 150 வருடங்களாக இருந்து வருகிறது இந்த பிறப்புரிமைச் சட்டம். அதாவது ஒரு பெற்றோர் எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, எந்த நாட்டு குடிமக்களாக இருந்தாலும் சரி, அந்தத் தம்பதிக்கு பிறக்கும் குழந்தையானது, அமெரிக்காவின் எல்லைக்குள் பிறந்திருந்தால், அக்குழந்தைக்கு பிறப்பிலேயே அமெரிக்க குடிமகன் என்ற குடியுரிமை கிடைத்து விடும். இந்த சட்டத்துக்குத்தான் தற்போது டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்த சட்டமே கேலிக்கூத்தானது என்றும் டிரம்ப் வர்ணித்துள்ளார்.
தான் அதிபராக பதவியேற்றவுடன், ஜனவரி 20ம் தேதி இந்த சட்டம் மாற்றப்பட்டு, பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை என்ற அம்சம் நீக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெற்ற பலருக்கும் சட்ட ரீதியான சிக்கல் வரும் என்று தெரிகிறது. குறிப்பாக இந்தியர்களுக்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து டிரம்ப் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறுகையில், இதை மாற்றப் போகிறோம். இதை நாம் மாற்றியாக வேண்டும். முடிவு கட்டியாக வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். தனது முதல் பதவிக்காலத்திலேயே இதுதொடர்பாக அவர் பேசி வந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் அப்போது அவர் எடுக்கவில்லை. ஆனால் இப்போது இதைச் செய்வாரா என்ற அச்சமும் பீதியும் கிளம்பியுள்ளது.
பல பெண்கள் கர்ப்பம் தரித்த பின்னர் அமெரிக்காவுக்கு சுற்றுலா வருவது போல வந்து இங்கு குழந்தை பெற்றுக் கொண்டு குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையை வாங்கிய பின்னர் தங்களது சொந்த நாட்டுக்குப் போய் விடுகின்றனர். இதை தடுத்தாக வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து பேசி வருவது நினைவிருக்கலாம்.
டிரம்ப் தற்போது அளித்துள்ள பேட்டியில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியுள்ளார். அதுதான் அபாயகரமானதாக இருக்கிறது. அவர் கூறுகையில், நாங்கள் குடும்பங்களைப் பிரிக்கவில்லை. அனைவரும் இணைந்தே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே ஒருவரை நாட்டை விட்டு அனுப்பும்போது குடும்பத்தோடுதான் அனுப்புவோம் என்று கூறியுள்ளார். அதாவது நாடு கடத்தும் நபருடன் சேர்த்து அவரது குடும்பத்தினரையும் சேர்த்தே அனுப்பி விடுவோம் என்பதுதான் இந்த பேச்சின் அர்த்தமாகும்.
ஆனால் டிரம்ப் கூறியுள்ள இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால் மிகப் பெரிய சட்ட சிக்கல்கள் எழும் என்று தெரிகிறது. காரணம் பலரது குடியுரிமை ரத்தாகும் அபாயம் ஏற்படும், பெரும் குழப்பம் ஏற்படும், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதில் இந்தியர்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை. 2022 அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அங்கு தற்போது 40.8 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் வசிக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 34 சதவீதம் பேர் அதாவது 10.6 லட்சம் பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள் ஆவர். பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பெற்றவர்கள் இவர்கள். டிரம்ப் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தால் இவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும்.
இருப்பினும் டொனால்ட் டிரம்ப் கூறுவது போல சட்டத் திருத்தம் அத்தனை எளிதானதாக இருக்காது என்பதால் இந்திய அமெரிக்கர்கள் சற்று ரிலாக்ஸ்டாக உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tirunvannamalai Deepam 2024.. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு தடை!
திருவண்ணாமலை தீபம் 2024.. தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள்!
Yearender 2024.. கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் எவை தெரியுமா?.. இந்தாங்க லிஸ்ட்!
Yearender 2024: இந்தியர்கள் விழுந்து விழுந்து எதைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள் பாருங்க!
தப்புத்தான்.. இனிமே வடிவேலு பத்தி அவதூறாக பேச மாட்டேன்.. கோர்ட்டில் உறுதி அளித்த சிங்கமுத்து!
புஷ்பா 2.. 2024ம் ஆண்டின் பிளாக் பஸ்டர் படம்.. 6 நாட்களில் 1000 கோடியைத் தாண்டுகிறது.. புது சாதனை!
மழை அப்டேட்: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை.. 11 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு!
Proverbs: உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.. உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!
பைக் டாக்ஸிகள் இயங்கலாம்.. ஆனால் விதி மீறலை அனுமதிக்க முடியாது.. போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர்
{{comments.comment}}