Donald Trump Inauguration.. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்கிறார் டொனால்ட் டிரம்ப்!

Jan 19, 2025,08:10 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக  டொனால்ட் டிரம்ப் நாளை பதவியேற்கவுள்ளார். இந்திய நேரப்படி நாளை இரவு 10.30 மணிக்கு பதவியேற்பு விழா வாஷிங்டனில் நடைபெறவுள்ளது.


வழக்கமாக திறந்த வெளியில் பதவியேற்பு விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது வாஷிங்டனில் கடுமையான குளிர் நிலவவதால் உள்ளரங்கில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.  இதற்கு முன்பு கடைசியாக 1985ம் ஆண்டு ரொனால்ட் ரீகன் 2வது முறையாக அதிபர் பதவியேற்றபோது உள்ளரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக வெளியில்தான் விழா நடந்து வந்தது நினைவிருக்கலாம்.


இந்த பதவியேற்பு விழாவில் இந்தியாவிலிருந்தும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். அதில் முக்கியமானர்கள் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர். இன்று அவர்கள் டிரம்ப்பை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்




எலான் மஸ்க், ஜெப் பெஜாஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தூதர்கள், பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கான விஐபிகள் முன்னிலையில் டிரம்ப் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்ப்புக்கு பதவிப்பிரமானம் செய்து வைப்பார். பைபிள் மீது கை வைத்தபடி டிரம்ப் பதவியேற்றுக் கொள்வார்.


அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜோ பைடன் டிரம்ப் பதவியேற்பு விழாவில் தான் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பர்க், ஆப்பிள் சிஇஓ டிம் குக், டிக்டாக் சிஇஓ செள சியூ உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் இன்று முதல் தடை அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ் ஜூனியர், பராக் ஒபாமா ஆகியோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.  அதேசமயம், பராக் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டொனால்ட் டிரம்ப் வெற்றியின் சிறப்பம்சங்கள்




டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக அதிபராகவுள்ளார். அவரது இந்த வெற்றியில் பல்வேறு சிறப்புகளும் அடங்கியுள்ளன. அமெரிக்காவின் 200 ஆண்டு கால வரலாற்றில், ஒருமுறை அதிபராக இருந்து, மறுபடியும் போட்டியிட்டு தோல்வி அடைந்து, அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2வது அதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் டிரம்ப்.


இதற்கு முன்பு 1800களில் குரோவர் கிளீவ்லான்ட் இதுபோல முதல் முறை அதிபராக இருந்து, மறுமுறை தோற்று, மீண்டும் போட்டியிட்டு 2வது முறை அதிபராகி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


2017ம் ஆண்டு முதல் 2021 வரை அதிபராக பதவி வகித்திருந்தார் டிரம்ப்.  ஆனால் 2021 தேர்தலில் அவர் தோல்வியுற்றபோது அவர் நடந்து கொண்ட விதம் பதட்டத்தைக் கிளப்பியது. தானே மீண்டும் வெற்றி பெற்றதாக அவர் அறிவித்தார். பிடன் வெற்றியை அவர் ஏற்கவில்லை. வாஷிங்டனில் உள்ள கேபிடல் அலுவலகத்தில் பெரும் கலவரத்தில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். ஜோ பைடன் அதிபர் பதவியேற்றபோது அதில் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.  இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் அதிபராகியுள்ளார் டிரம்ப்.


டிரம்ப்பின் 2வது பதவிக்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். பதவிக்கு வரும் முன்பே கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்து விட்டார் டிரம்ப் என்பது நினைவிருக்கலாம். 


அதிபராக பதவியேற்றதும் முதல் நாளிலேயே 100 உத்தரவுகளில் தான் கையெழுத்திடவிருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில்.. பிப்ரவரி 5 பொது விடுமுறை அறிவிப்பு

news

வட மாநிலங்களைப் போல.. இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்.. செல்வப்பெருந்தகை கண்டனம்

news

கோமியம் விஞ்ஞான பூர்வமாக அமிர்த நீர்.. ஆயுர்வேத மருந்து.. அரசியலாக்காதீர்கள்.. டாக்டர் தமிழிசை

news

கொல்கத்தா பாலியல் வழக்கு.. சாட்சியைக் கலைத்ததே மமதா பானர்ஜிதான்.. பெண்ணின் தந்தை புகார்!

news

பெரியார் குறித்துக் கேட்ட வாக்காளர்.. ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி அளித்த பதில்!

news

சபாநாயகர் அப்பாவு சொன்ன ஞானசேகரன் இவர்தான்.. பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தரும் விளக்கம்!

news

திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி.. பட்டையைக் கிளப்ப வரும் இசைஞானி.. ரசிகர்களே ரெடியா?

news

அன்னா ஹசாரே போல.. உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்?.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு கேள்வி

news

நெகிழியின் கண்ணீர் (கவிதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்