20 நிமிஷம் உள்ள வச்சுட்டாங்களே.. முகமே இருண்டு.. "மக் ஷாட்".. ஷாக் டிரம்ப்!

Aug 25, 2023,11:37 AM IST
வாஷிங்டன்: முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 20 நிமிடம் அவர் சிறையில் இருக்க வேண்டியதாகி விட்டது. அதன் பிறகுதான் அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வர முடிந்தது.

அமெரிக்கா வரலாற்றிலேயே அதிபராக இருந்த ஒருவர் கிரிமினல் குற்றச்சாட்டுக்குள்ளாகி சிறைக்குப் போனது இதுவே முதல் முறையாகும். பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள  டொனால்ட் டிரம்ப்பை அட்லாண்டா போலீஸார் கைது செய்து சிறைக்குக் கொண்டு சென்றனர். அங்கு வழக்கமாக கைதிகளுக்கு எடுக்கப்படும் போட்டோ செஷனும் நடந்துள்ளது.  இதெல்லாம் டிரம்ப் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.



"மக் ஷாட்" எனப்படும் அந்த முகம் மட்டும் அடங்கிய புகைப்படத்தை  ஜார்ஜியா மாகாண போலீஸார் வெளியிட்டுள்ளனர். டிரம்ப் விதம் விதமான முக பாவனைகளுடன் போஸ் கொடுப்பதில் வல்லவர். அவரது புகைப்படங்கள் எப்போதுமே கலகலப்பை கொடுப்பவை. அவரும் போஸ் கொடுக்க சளைக்காதவர். ஆனால் முதல் முறையாக அவரது இறுகிப் போன இருண்டு போன முகத்தை மக் ஷாட்டில் பார்த்து அமெரிக்கர்களே ஆடிப் போய் விட்டனர்.

இந்தப் படத்தை இப்போது அவரது ஆதரவாளர்களும் சரி, எதிர்ப்பாளர்களும் சரி படு வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார் டிரம்ப்.  அவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

ஜார்ஜியா மாகாண போலீஸார் சற்று முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. முரட்டுத்தனம் என்றார்,விதிமுறைப்படி அவர்கள் நடந்து கொண்டுள்ளனராம். விலக்கு கொடுக்கவில்லையாம். வழக்கமான கிரிமினல் கைதிகளை எப்படி நடத்துவார்களோ அது போலவே டிரம்ப்பையும் நடத்தியுள்ளனராம். 

இந்த மக் ஷாட்டை டிரம்ப்பே தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதையும் கூட அவர் அனுதாப அலையாக மாற்றி வருகிறார். ஜார்ஜியாவின் புல்டன் கவுன்டி சிறையில் கிட்டத்தட்ட 20 நிமிடம் இருந்துள்ளார் டிரம்ப். அதன் பின்னர்தான் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்