கொச்சி: கொச்சி கலமசேரியில் நடந்த ஜெஹோவா சாட்சிகள் கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிகுண்டு சம்பவத்திற்கு தான் தான் காரணம் என்று கூறி டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்துள்ளார். அவர் மீது போலீஸார் யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொச்சி கலமசேரியில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் நடந்த ஜெஹோவா சாட்சிகள் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் இன்று காலை பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் முதலில் ஒரு பெண் பலியானார். அதைத் தொடர்ந்து காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குமாரி என்ற இன்னொரு பெண்ணும் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கி விட்ட இந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்கள் அலர்ட் செய்யப்பட்டன. கேரளாவுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டது. வாகன சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொடக்கரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்ற நபர் சரணடைந்தார். தான்தான் இந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று அவர் போலீஸாரிடம் கூறவே போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அதே ஜெஹோவா சாட்சிகள் சர்ச்சைச் சேர்ந்தவர்தான் மார்ட்டின். தனது செல்போனிலிருந்து ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக தெரிவித்தார் மார்ட்டின்.
விசாரணைக்குப் பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, தான் ஏன் குண்டு வைத்தேன் என்ற காரணத்தை விளக்கி தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவும் போட்டுள்ளார் மார்ட்டின். அதில் ஜெஹோவா சாட்சிகள் சர்ச்சானது, துவேஷத்தைப் பரப்பி வருகிறது. அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று நான் தொடர்ந்து அவர்களை கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் அதைப் புறக்கணித்து விட்டனர். அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. எனவேதான் வெடிகுண்டு வைத்தேன் என்று கூறியுள்ளார் மார்ட்டின்.
மார்ட்டின் வாக்குமூலமும், அவர் செய்த காரியமும் கேரளாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மார்ட்டினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
{{comments.comment}}