"JN 1".. கேரளாவில் பரவும் புது கொரோனா.. முந்தைய வேரியன்ட்களை விட தீவிரமானது..!

Dec 17, 2023,12:58 PM IST

திருவனந்தபுரம்: இதுவரை வந்த கொரோனாவைரஸ் வேரியன்ட்களை விட தீவிரமாகப் பரவக் கூடிய புதிய வகை கொரோனாவைரஸ் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது.  "JN 1" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


திருவனந்தபுரம் மாவட்டத்தில் இந்தப் புதிய வகை கொரோனாவைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய கொரோனாவைரஸ் வகைகளை விட இது தீவிரமானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கரகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையில் இந்த வைரஸைக் கண்டறிந்துள்ளனர். 




79 வயதான அந்த நபருக்கு இன்ப்ளூயன்ஸா பாதிப்பு ஏற்பட்டால் என்னெல்லாம் அறிகுறிகள் இருக்குமோ அதேபோன்ற அறிகுறிகள் இருந்தன.  அவர் தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டார். இந்த வகை கொரோனாவைரஸ் வகை இன்னும் உலக அளவில் பெரிய அளவில் பரவவில்லை என்ற போதிலும் கூட இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


என்னெல்லாம் அறிகுறிகள்  தென்படும்?


இந்தியாவின் கடைசி கோவிட் அலையில் பரவிய ஓமைக்ரான் வகையின் ஒரு திரிபாக இந்த JN 1 வகை வைரஸ் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில்தான் இது முதன் முதலில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது.  அடுத்து சீனாவில் சில நாட்களுக்கு முன்பு இது கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த வகை வைரஸ் தீவிரமானது என்றாலும் கூட பீதி அடையத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து இதைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்.  வழக்கமான காய்ச்சல், மூக்கடைப்பு, தொண்டை வலி, தலைவலி, வயிற்று உபாதைகள் ஆகியவைதான் இந்த வகை கொரோனா பாதிப்புக்குள்ளானோரிடம் தென்படும் அறிகுறிகள் ஆகும். சிலருக்கு மட்டுமே மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்படுகிறது. மற்றபடி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் நான்கு, ஐந்து நாட்களில் குணமடைந்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் வெறும் காற்றுதான் வீசுது.. மழை இல்லை.. பல மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று லீவு!

news

தமிழ்நாட்டை நோக்கி வேகமாக.. நகர்ந்து வருகிறது ஃபெங்கல் புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

Tirupati temple.. திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.15,000 திருடியவர் கைது.. தலைக்கு தில்லுதான்!

news

Cyclone Fengal: இன்னிக்கு சென்னையில் நேத்து மாதிரியெல்லாம் பெருசா மழை இருக்காது..தமிழ்நாடு வெதர்மேன்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 27, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Cyclone Fengal: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 11 மாவட்டங்கள்!

news

கனமழை எதிரொலி.. கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்கவும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

புயல் எங்கு எப்போது கரையைக் கடக்கும்.. IMD சென்னை தலைவர் பாலச்சந்திரன் சொல்வது என்ன?

news

திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறில்லை.. அவரது எழுச்சி பிரமாதமாக இருக்கிறது.. நடிகர் பார்த்திபன்

அதிகம் பார்க்கும் செய்திகள்