சென்னை: சென்னை கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி, உடல் நலம் சரியான நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜியை விக்னேஷ்வரன் என்ற இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விக்னேஷ்வரனை கைது செய்த போலீசார் விசாரித்ததில் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் மருத்துவரை தாக்கியதாக இளைஞர் கூறினார்.
மருத்துவரை தாக்கிய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்டடனர்.
இதனையடுத்து மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசும் சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்பின்னர் மருத்துவர்களும் போராட்டங்களை நிறுத்தினர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பாலாஜி உடல் நலம் தேறிய நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் முழு நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
{{comments.comment}}